இந்திய சந்தையில் மின்சார இரு சக்கர வாகனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும், பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தொடர்ந்து பல மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சமீபத்திய பிராண்ட் ஒகாயா எலக்ட்ரிக் ஆகும். இந்த நிறுவனம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் EV எக்ஸ்போ 2021 இல் ஃபாஸ்ட் (Faast) என்ற அதன் அதிவேக இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.90,000 ஆகும்.
இந்த மின்சார ஸ்கூட்டரை வெறும் ரூ.1,999 என்ற டோக்கன் தொகையில் முன்பதிவு செய்யலாம். மின்சார ஸ்கூட்டரை (Electric Scooter) ஒகாயா எலக்ட்ரிக் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் டீலர்ஷிப்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.
4.4 kWh லித்தியம்-பாஸ்பேட் பேட்டரி பேக்
ஒகாயா ஃபாஸ்ட் கனெக்டட் மின்சார ஸ்கூட்டருடன் 4.4 கிலோவாட் லித்தியம்-பாஸ்பேட் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சார்ஜில் இந்த ஸ்கூட்டருக்கு 150 கிமீ ரேஞ்சை அளிக்கின்றது.
பேட்டரியை சரியாகப் பயன்படுத்தினால், ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை இந்த ஸ்கூட்டரை இயக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஒகாயா ஃபாஸ்ட் மின்சார ஸ்கூட்டருடன் எல்இடி விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டே டைம் ரன்னிங் லைட்ஸ் மற்றும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் போன்ற பல அம்சங்கள் அளிக்கப்படுள்ளன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60-70 கி.மீ ஆகும்.
ALSO READ | மின்சார வாகன சந்தையை கலக்க வரும் 3 அட்டகாச மின்சார இரு சக்கர வாகனங்கள்!! விவரம் இதோ
ஃபெராட்டோ என்ற மின்சார மோட்டார்சைக்கிளின் காட்சியும் காட்டப்பட்டது
EV எக்ஸ்போ 2021 இல் ஒகாயா எலக்ட்ரிக் நிறுவனம் ஒரு மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியதைத் தவிர, விரைவில் அது அறிமுகம் செய்யவுள்ள மின்சார மோட்டார்சைக்கிள் ஃபெராட்டோவின் (Ferrato) ஒரு காட்சியையும் காண்பித்தது.
இந்த மின்சார மோட்டார்சைக்கிள் (Electric Motorcycle) 2022 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-மோட்டார் சைக்கிள் 2 kW மோட்டார் மற்றும் 90 km/h வேகத்தில் இயக்கக்கூடிய 3 kW பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், இந்த மின்சார மோட்டார்சைக்கிளை 100 கிமீ வரை இயக்க முடியும். நிறுவனம் நாட்டில் பிரபலமான மின்சார வாகன (Electric Vehicles) பிராண்டாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் 6 மாதங்களில் நாடு முழுவதும் 225-க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை உருவாக்கியுள்ளது.
ALSO READ | E-Ashwa: EV சந்தையில், மிகக்குறைந்த விலையில் அட்டகாசமாய் களமிறங்கும் ஸ்டைலிஷ் ஸ்கூட்டர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link –
Apple Link – https://apple.co/3loQYeR