க்ராக்பிரையின் புரொடக்ஷன்ஸ் மற்றும் எம் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் நாட் ரீச்சபிள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்துரு முருகானந்தம்
மூன்று இளம் பெண்கள் காணாமல் போகிறார்கள் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் போலீஸ் விசாரணை அதிகாரிகளாக விஷ்வா மற்றும் சுபா ஆகியோர் களம் இறங்குகிறார்கள். இதில் இருவர் கொலை செய்யப்பட்டிருக்க, ஒருவரை தேடிச் செல்கின்றனர். இறுதியில் காணாமல் போன அந்தப் பெண்ணை கண்டுபிடித்தார்களா? மற்ற இருவரை கொலை செய்து யார்? காரணம் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.
விஷ்வா மற்றும் சுபா இருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக அழுத்தமாகவும் செய்துள்ளனர்.
மற்றும் சாய் தன்யா, ஹரிதாஸ்ரீ, காதல் சரவணன், காலங்கள் தினேஷ், பிர்லாபோஸ், ஷர்மிளா, கோவை குருமூர்த்தி இலக்கியா, சாய் ரோகிணி ஆகியோர் நடிப்பு படத்தின் முக்கிய கதாபாத்திரம் நல்ல கதை ஒட்டத்திற்க்கு சரியாக இருந்தது
சுகுமாரன்சுந்தரின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிக்கு தேவை யான ஒளிவீச்சு படத்திற்க்கு பக்கபலமாக இருந்தது .
சரண்குமார் பின்னனி இசை படத்திற்கு கூடுதல் பலம்
படத்தொகுப்பு மற்றும் படத்தை எழுதி இயக்கியிருக்கும் சந்துரு முருகானந்தம் போலீஸ் விசாரணையை மையமாக வைத்து க்ரைம் த்ரில்லரை காதல் கலந்த கதைகளம் அமைத்துள்ளார் ‘வழக்கமான கதையாக நகர்தாலும் அடுத்து அடுத்து காட்சி யாரும் யூகிக்க முடியாத இறுதி காட்சி அமைதந்தது பாராட்டு இருந்தாலும் தெளிவாக திரைக்கதையமைத்து இருக்கலாம் இறுதியில் பார்க்க விறுவிறுப்பாக காட்சியமைப்பு கொடுத்திருப்பதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர்.
வித்தியாசமான கதைகளம் இயக்குனர் தமிழ் திரையுலகில் முத்திரை பதிக்கிறார் அனைவரும் பார்க்க கூடிய படம்