நானே வருவேன்’ படத்தின் டீஸர் ரசிகர்களின் முன்னிலையில் வெளியீடு

நானே வருவேன்’ படத்தின் டீஸர் ரசிகர்களின் முன்னிலையில் வெளியீடு

கலைத்துறையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான Vகிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு அவர்கள், வித்தியாசமான கதை களத்திற்கு பெயர் போன இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து உருவாக்கிக் கொண்டிருக்கும் காவியம் தான் ‘நானே வருவேன்’. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான ‘வீரா சூரா’ பாடல் ஏற்கனவே 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்கள் எனும் சாதனையை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர், நேற்று மாலை மணிக்கு  வெளியாகியது. மேலும் சிறப்பூட்டும் வண்ணமாக தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் ஒரு கொண்டாட்டத்துடன் மிகப் பிரமாண்டமாக ரோகிணி திரையரங்க  வளாகத்தில் LED திரையில் பிரத்தியேகமாக காட்சியிடபட்டது.
இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர்கள்

தனுஷ் K ராஜா
இந்துஜா
எல்லி அவரம்
‘இளைய திலகம்’ பிரபு
யோகி பாபு
ஹியா தவே
பிரணவ்
பிரபவ்
ஃபிராங்க்கிங்ஸ்டன்
சில்வென்ஸ்டன்
துளசி
சரவண சுப்பையா
ஷெல்லி N குமார்
மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் K செல்வராகவன்

தொழில்நுட்ப குழுவினர்

இயக்குனர் : K செல்வராகவன்
தயாரிப்பு : கலைப்புலி S தாணு
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ்
படத் தொகுப்பு : புவன் சீனிவாசன்
தயாரிப்பு வடிவமைப்பு : R K விஜய முருகன்
நடனம் : கல்யாண் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர்
சண்டைக் காட்சி : திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சிவா
தயாரிப்பு நிர்வாகி : வெங்கடேசன்
ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் : இலன் குமரன்
ஆடை வடிவமைப்பு:  காவியா ஸ்ரீ ராம்
DI : நாக் ஸ்டூடியோஸ்
கலரிஸ்ட்: பிரசாந்த் சோமசேகர்
பாடல்கள் : யுகபாரதி, மதன் கார்க்கி,  செல்வராகவன் தனுஷ்
ஸ்டில்ஸ் : தேனி முருகன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹமத், டைமண்ட் பாபு