31 டிசம்பர் 2022 அன்று நிறைவுற்ற காலாண்டு/ மற்றும் 9 மாதங்களுக்கான வங்கியின் பொருளாதார நிலை குறித்த முடிவுகள்

31 டிசம்பர் 2022 அன்று நிறைவுற்ற காலாண்டு/ மற்றும் 9 மாதங்களுக்கான வங்கியின் பொருளாதார நிலை குறித்த முடிவுகள்

வங்கியின் உலகளாவிய வர்த்தகம் ₹10.49 லட்சம் கோடி எனும் நிலையை எட்டியது

இயக்க லாபம் ஆண்டிற்கு ஆண்டு (ஆ-ஆ) எனும் அடிப்படையில் 24% உயர்ந்துள்ளது
நிகர லாபம் ஆ-ஆ எனும் அடிப்படையில் 102% உயர்ந்துள்ளது
முக்கிய அம்சங்கள் (நிறைவுற்ற காலாண்டு டிச ‘22,
ஒப்பீடு டிச ‘21 உடன்

நிகர லாபம் டிச 22ல் 102% உயர்வு (₹1396 கோடி) இது டிச 21ல் ₹690 கோடி
இயக்க லாபம் டிச 22ல் 24% உயர்வு (₹4061 கோடி) இது டிச 21ல் ₹3288 கோடி (ஆ-ஆ) எனும் அடிப்படையில்
நிகர வட்டி வருவாய் டிச 22ல் 25% உயர்வு (₹5499 கோடி) இது டிச 21ல் ₹4395 கோடி
கட்டணம் மீது ஆதாரப்பட்டிருக்கும் வருவாய் 6% வளர்ச்சி (ஆ-ஆ) எனும் அடிப்படையில் இது ₹704கோடி
செலவுகளுக்கும் வருவாய்க்குமான விகிதம் டிச 22ல் 43.71%. இது டிச 21ல் 44.75%
உள்நாட்டு நிகர வட்டி மார்ஜின் வளர்ச்சி. டிச 22ல் இது 3.74%, டிச 21ல் இது 3.03%
சொத்துக்களின் மீதான ஈட்டம் டிச 22ல் 0.80%, டிச 21ல் இது 0.43%
பங்கு பத்தி்ரங்களின் மீதான ஈட்டம் உயர்ந்துள்ளது. டிச 22ல் 15.21%, டிச 21ல் இது 8.26%
கடன் வழங்குதல் 13% உயர்ந்துள்ளது (ஆ-ஆ) எனும் அடிப்படையில். டிச 22ல் ₹451658 கோடி டிச 21ல் இது ₹400432 கோடி
ராம் (சில்லறைக் கடன், விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ)கடன் வழங்குதல் 12% உயர்ந்துள்ளது டிச 22ல் ₹262811 கோடி டிச 21ல் இது ₹233738 கோடி
ராம் பிரிவின் பங்களிப்பு மொத்த கடன் தொகைகளில் 62% ஆகும். சில்லறை விவசாயம் மற்றும் எம்எஸ்எம்இ இவை முறையே 15%, 15% மற்றும் 6%. வளர்ச்சியானது (ஆ-ஆ) எனும் அடிப்படையில். வீட்டு வசதிக் கடன் 12% வளர்ச்சி, வாகனக் கடன் 27% மற்றும் தனிநபர் கடன் 35%. இவையனைத்தும் (ஆ-ஆ) எனும் அடிப்படையில்.
வைப்பு நிதிகள் வளர்ச்சி, 6% ஆண்டிற்கு ஆண்டு எனும் அடிப்படையில் டிச 22வில் வளர்ச்சி கண்டு ₹597114 கோடியாக நிலவியது
காசா விகிதம் 40.4% ஆகும்
ஜிஎன்பிஏ 260 அடிப்படைப் புள்ளிகள் (ஆ-ஆ எனும் அடிப்படையில்) குறைந்து, டிச 22ல் இது 6.53% டிச 21ல் இது 9.13% என்என்பிஏ 172 அடிப்படைப் புள்ளிகள் (ஆ-ஆ எனும் அடிப்படையில்) குறைந்துள்ளது. இது 2.72% டிச 21ல். டிச 22வில் இது 1% ஆகும

ஒதுக்கீடுகளின் விகிதம் டிச 22 வில், டிச 21 ல் (இரண்டு பி்சிஆர்கள்) இருந்ததைவிட 810 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம். இது டிச 21ல் 84.59%, டிச 22 இது 93.59% (ஆ-ஆ எனும் அடிப்படையில்)
மூலதனப் போதுமை விகிதம் 15.74%. சி இ டி -1, 59 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம் . இது 11.97%. டயர் 1 மூலதனம் 55 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம் (ஆ-ஆ எனும் அடிப்படையில்) இது 12.58%

முக்கிய அம்சங்கள் (நிறைவுற்ற காலாண்டு டிச 22, ஒப்பீடு செப் 22 உடன்)

நிகர லாபம் 14% உயர்வு (காலாண்டிகுக் காலாண்டு எனும் அடிப்படையில். டிச 22ல் இது ₹1396 கோடி செப் 22ல் இது ₹1225 கோடி
இயக்க லாபம் 12% உயர்வு (காலாண்டிகுக் காலாண்டு எனும் அடிப்படையில். டிச 22ல் இது ₹4061 கோடி செப் 22ல் இது ₹3629 கோடி
நிகர வட்டி வருவாய் 17% உயர்வு (காலாண்டிகுக் காலாண்டு எனும் அடிப்படையில். டிச 22ல் இது ₹5499கோடி செப் 22ல் இது ₹4684 கோடி
(காலாண்டிகுக் காலாண்டு எனும் அடிப்படையில் வரிசைக் கிரமப்படி சொத்துக்களின் மீதான வருவாய் 9 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம். இது டிச 22ல் 0.80, செப் 22ல் 0.71%
பங்குகளின் மீதான ஈட்ட வருவாய் டிச் 22ல் 15.21% ஆகும். இது சென்ற காலாண்டில் 13.83% ஆக நிலவியது
வருவாய்க்கும் செலவுகளுக்குமான விகிதம் டிச 22ல் 43.71%, செப் 22ல் 44.27%
நிகர வட்டி மார்ஜின் 54 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிப்பு. டிச 22ல் 3.74%, செப் 22ல் 3.20%

 

முக்கிய அம்சங்கள் ( டிச 22 ஒப்பீடு டிச 21)

நிகர லாபம் 30% அதிகரிப்பு ₹3834 கோடி (9MFY23) ₹2961 கோடி (9MFY22)
இயக்க லாபம் 13% அதிகரிப்பு ₹11255 கோடி, ₹9979 கோடியிலிருந்து
நிகர வட்டி வருவாய் 18% அதிகரிப்பு ₹14717 கோடி (9MFY23) ₹12473 கோடி (9MFY22)
சொத்துக்களின் மீதான வருவாய் (9MFY23) 0.75% அதிகரிப்பு, 0.62% லிருந்து
பங்கு பத்திரங்களின் ஈட்ட வருவாய் முன்னேற்றம் 14.42%, 12.24% லிருந்து
வருவாய்க்கும் செலவுகளுக்குமான விகிதம் 43.35%. இது 9MFY22ல் 43.99%
நிகர வட்டி மார்ஜின் (உள்நாடு) 42 அடிப்படைப் புள்ளிகள் முன்னேற்றம். இது 3.35% (9MFY23ல்) , இது 2.93% (9MFY22ல்)

 

 

31 டிசம்பர் 2022 அன்றுள்ளபடி வர்த்தக பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய அம்சங்கள்

வர்த்தகம்:
மொத்த வர்த்தகம் ஆ-ஆ எனும் அடிப்படையில் 9% வளர்ச்சி. டிச 22ல் இது ₹1048772 கோடி, டிச 21ல் ₹963007 கோடி, செப் 22ல் இது ₹1026801 கோடி
கடன் தொகைகள் 13% வளர்ச்சி. இது டிச 22ல் ₹451658 கோடி சென்ற வருடம் இது ₹400432 கோடி. ராம் (RAM) பிரிவு 12% வளர்ச்சி, இதில் சில்லறை மற்றும் விவசாயக் கடன் 15% வளர்ச்சி ஆ-ஆ எனும் அடிப்படையில்
வைப்பு நிதித் தொகை 6% வளர்ச்சி ஆ-ஆ எனும் அடிப்படையில். இது டிச 22ல் ₹597114 கோடி சென்ற வருடம் இது ₹562575 கோடி
காசா வைப்பு நிதிகள் வளர்ச்சி 3% ஆ-ஆ எனும் அடிப்படையில். டிச 22ல் ₹241213 கோடி. மொத்த டெபாசிட்டுகளில் காசா வைப்பு நிதிகள் பங்கு 40.4%
முன்னுரிமைக் கடன்கள் ₹152850 கோடி, டிச 22ல். இது ஏ என் பி சி 45.19% என்ற பங்கை வகிக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட வரையறை 40%
.
வலைப்பின்னலமைப்பு
வங்கிக்கு 5770 உள்நாட்டுக் கிளைகள் உள்ளன. இவற்றுள் 1959 ஊரகக்கிளைகள். புறநகர் 1509, நகர்ப்புறம் 1161, மெட்ரோ கிளைகள் 1141. மூன்று வெளிநாட்டுக் கிளைகள் மற்றும் 1 டிஜிட்டல் இயங்குமுறைக் கிளை.
ஏடிஎம் கள் பி என் ஏக்கள் 4969 மற்றும் 10368 வர்த்தக முகவர்கள்

எண்சார் வர்த்தகப் பரிவர்த்தனைகள்
3 டிஜிட்டல் முறையில் இயங்கும் யூனிட்டுகளை வங்கி சுவுத் தில்லியிலும், லக்னவிலும், காரைக்காலிலும் அமைத்துள்ளது
ஏடிம், பிஎன்ஏ மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 7% முன்னேற்றம் கண்டுள்ளன (ஆ-ஆ எனும் அடிப்படையில்)
மொபைல் பரிவர்த்தனைகள் நிகழ்த்துவோர் 73% அதிகரித்துள்ளனர். மொத்த பரிவர்த்தனைகள் 85% எனும்படி அதிகரித்துள்ளது (ஆ-ஆ எனும் அடிப்படையில்)
யூபிஐ பயன்பாட்டாளர்கள் 19% என்பதாகவும் அவர்களின் பரிமாற்றங்கள் 91% என்பதாகவும் அதிகரித்துள்ளது (ஆ-ஆ எனும் அடிப்படையில்)

விருதுகளும் பாராட்டுதல்களும்: நாபார்ட் வழங்கிய மிகச்சிறந்த முறையில் எஸ் எச் ஜியுடன் (SHG-Bank linkage) பணியாற்றிய வங்கி என்பதை நமது வங்கி, FY22வில் பெற்றுள்ளது

ஈஸ் (EASE) 4.0 மாற்றமுறைகள் குறியீட்டு விருதை முன்னணியாளராக வங்கி பெற்றுள்ளது
ஃபைநான்ஷியல் எக்ஸ்பிரஸ்ஸின் சிறந்த பொதுத்துறை வங்கி (2020-21) எனும் விருதை வங்கி கைப்பற்றியுள்ளது
டலால் ஸ்ட்ரீட்டின் ஜர்னல் வழங்கிய அதிக வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கும் வங்கி பான்கிங் விருதை (2022) வங்கி பெற்றுள்ளது
எஃப்ஐசிசிஐ சிஎம்எஸ்எம்இ நமது வங்கியை எம்எஸ்எம்இ பிரிவினருக்கான சிறந்த சேவையை அளித்துள்ளாக அறிவித்துள்ளது.

எங்களது முழு கவனம்

இந்தியன் வங்கியின் தொலைநோக்குப் பார்வையானது, வங்கிப் பரிமாற்றங்களில் புதியனவற்றைக் கொண்டு வருதலிலும் மற்றும் சேவைகளை வழங்குதலிலும், தொழில்நுட்ப நுணுக்கங்களை வழங்கலிலும், எளிய முறையில் வர்த்தகத்தை நடத்திக் கொடுப்பதிலும், இவற்றை எல்லாம் வங்கி ஊழியர்களது ஈடுபாட்டிலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதல் கொண்டு நடைமுறைப்படுத்துவதிலும், ஓரு நிரந்தரத் தன்மையுடன் மாறுபட்ட வழங்குமுறைகளில் கொடுப்பதிலேயே இருந்து வந்திருக்கிறது.

பொருளாதார நிலையில் வங்கி மேம்பட்டிருக்கிறது. மூலதனம் நல்ல நிலையை எட்டியுள்ளது. சொத்துக்களின் தரமும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறது. எங்களது கவனம் அதிக செலவற்ற வைப்பு நிதிகளின் அடிப்படைத் தன்மையை அதிகரிப்பதிலும், காசா நிதிகளின் மீது அதிக கவனம் செலுத்துவதிலும் மற்றும் சில்லறை வைப்பு நிதிகள் சார்ந்த திட்டங்களை வழங்கி வெற்றியடைவதிலும், புதிய நல்லுறவுகளை ஏற்படுத்துவதிலும், கடன் வழங்குதலைப் பொறுத்தவரையில் ஓரு நல்ல ஆரோக்கியமான நிலையை, ராம் (RAM) பிரிவிலும் நி்றுவனங்கள் சார்ந்த பிரிவிலும் அடைந்து ஏற்படுத்துவதிலும் இருக்கும்.