ராயர் பரம்பரை” திரைபட விமர்சனம்

சின்ன சாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா நாயர் ,கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது “ராயர் பரம்பரை”.

 

மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சாதி மத பேதங்களைச் சுட்டிக்காட்டி சிரிப்பை சீரியசாக எடுத்து இயக்கியுள்ளார் இந்தப் பட இயக்குனர் ராம்நாத்.டி.

கோயம்புததூர் அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரில் செல்வாக்கு உள்ள ஒரு பெரியமனுஷன்தான் ராயர்  ஆனந்தராஜ்   கிராமத்தில்  இவர் வைத்ததுதான் சட்டம் அதிலும் அவரது தங்கை கஸ்தூரி காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட அவரது ஒரே மகள் சரண்யா நாயரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

சரண்யா நாயரை  காதலித்துதான் திருமணம் செய்து கொள்வார் என்கிறார் ஜோசியார் ஒரு கட்டத்தில் சரண்யா வீட்டை யாருடனோ ஓடிவிட்டார் என ஆனந்தராஜ் செய்தி வர அவர் மகளைத் தேடிச்  செல்கிறார் அவரைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் கதை.

படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கிருஷ்ணா காமெடி காட்சிகளில்  ஒரளவிற்கு ரசிக்கும் படியாக இருந்தது மொத்தத்தில் அவர் நடிப்பு காட்சிகளின் ரசிகர்களும் பிடிக்கும் ”

நாயாகி சரண்யா நாயர் அழகா வந்து கொடுத்தே வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்…

மொட்டை ராஜேந்திரன் , ஆனந்த்ராஜ், மனோபாலா உடன் நடித்தவர்கள்  திரைகதை ஓட்டத்திற்க்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்…. சில காட்சிகளில் காமெடி எடுபடவில்லை

காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இயக்குனர் ராம்நாத் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி எடுத்துள்ளார்… இதில் நடித்த நடிகர்கள் திறைமை அனுபவம் மிக்கவர்கள் அவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை  . ஒளிப்பதிவு விக்னேஷ் வாசுவின்.. கிராமத்தின் காட்சிகள் மற்றும் அவருடைய பதிவுகள் சிறப்பு… பின்னனி இசை கணேஷ் ராகவேந்தரா அருமை… படத்தில் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தது வினாயகர் பாடல் மீண்டும் கேட்க   இருக்கும்

மொத்தத்தில் ராயர் பரம்பரை விறுவிறுப்பு குறைவு .குடும்பத்துடன் பார்க்கலாம்!