“பொருளு”- திரைப்பட விமர்சனம்

பொருளு’ – திரைப்பட விமர்சனம்
தெருவில் அனாதையாக விடப்படும் குழந்தைகளை  எடுத்து வளர்க்கிறார்  மாற்றுத்திறனாளி ஒருவர் இவருடன் சேர்த்து ஒரு பெண் மற்றும் 5 ஆண் பிள்ளை களுடன் தெருவில் பிச்சையெடுத்து வாழ்ந்து  வருகின்றனர்.. .
எதிர்பாராதவிதமாக ஒரு நாள் இவர்களுடன் வளர்ந்த அந்த பெண்ணை இரவு தூங்கும் நேரத்தில் இருவர் தூக்கி சென்று கற்பழித்து விடுகிறார்கள் மறுநாள்  இறந்து விடுகிறாள்..
பெண் பிள்ளையின் சாவுக்கு காரணமானவர்கள் தட்டிகேட்ட மாற்று திறனாளியையும் அடித்து கொலை செய்கின்றனர். இதை கண்டதும் கோபம் கொள்ளும் சிறுவன் ஏழுமலை, அக்கா மற்றும் வளர்ப்பு  தந்தை கொலை செய்தவர்களை  கற்களை கொண்டு அடித்து கொலை செய்கிறான் .ஆதரவற்றவர்களாக அனாதையாக இருக்கும் இவர்களுக்கு  லோகல் தாதா கட்ட பஞ்சாயத்து செய்து வரும்  மாறன் சிறுவன் ஏழுமலையை நிலைமை அறிந்து தன்னுடன் சேர்த்து கொள்கிறான்  மாறனின் அடியாளாக வளம் வருகிறான் ஏழுமலை தன்னுடன் வளர்ந்த  அனாதையான தன்  தம்பிகள் 4  பேரையும் வெளிநாட்டில்  படிக்க வைக்க அனுப்புகிறான்.. ஏழுமலை
ஏழுமலையை  பிராமின (ஐயர் ஆத்து) பெண்ணான நாயகி  கரோலின் நாயகன் ஏழுமலையை  பார்த்தும் காதல் கொள்கிறார்.  ஆனால் நாயகன்   நாயகியின்  காதலை  ஏற்க மறுக்கிறான் மறுபுறம் ஊரே நடுங்கும்  பிரபல ரவுடி பிரம்மாவின் தம்பியை நாயகன் கொலை செய்ய  விடுகிறார்.  இறுதியில் நாயகன் நாயகியின் காதலை ஏற்காதற்கான காரணம் என்ன ?  வெளிநாட்டு சென்ற தம்பிகள் படிப்பை முடித்தார்களா? இல்லையா? என் பதே  ’பொருளு படத்தின் மீதிக்கதை .
நாயகனாக நடித்திருக்கும்  ஏழுமலை படத்தில்   நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர்  என்று மிக முக்கியமான மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளார்.  நாயகனுக்கு இது முதல் படம் போல இல்லாமல் அனுபவும் உள்ள நடிகராகவும் இயல்பான நடிப்பை  கொடுத்திருக்கிறார்.  காதல், ஆக்ஷன் , செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறந்த நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருக்கு தமிழ்த்திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது…
கதாநாயகியாக   கரோலின் படத்தில் குறைவான காட்சிகள் இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். ஆனால் காதலுக்காக இவர்  எடுக்கும் முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. படத்தில் நடித்த ,தீப்பெட்டி கணேசன்,பாய்ஸ் ராஜன்,மணிமாறன்,சாய் பூபதி  ஆகியோரும் கொடுத்த வேலையே சரியாக கச்சிதமாக  செய்திருக்கிறார்கள்.
பிரபல இசையமைப்பாளர் பல ஹிட் பாடல்கள் கொடுத்த சௌந்தர்யன் இசையில் அனைத்து பாடல்களும் மீண்டும் …மீண்டும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.  ஏதோ நெஞ்சோரம் என்ற  பாடல்  காதலின்  வலியை  சொல்லும் பாடலாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.ஒளிப்பதிவாளர் வாசுதேவன்  ஒளிப்பதிவு  கதை ஓட்டத்திற்கு துணை நிற்கிறது.
பெற்றோர்களால் அநாதையாக விடப்படும் குழந்தைகளின் நிலைமையை  சமூக அக்கறையோடு படத்தை உருவாக்கியிருக்கிறார்  அறிமுக இயக்குனர் ஏழுமலை  தான் சொல்ல வந்த கருத்தை திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தல் வேண்டும்  அழுத்தமான கதை சொல்ல வந்த முயற்ச்சிக்கு  கருத்தை  இயக்குனருக்கு பாராட்டுக்கள்… படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்..
நடிகர்கள் : ஏழுமலை,கரோலின் ,தீப்பெட்டி கணேசன்,பாய்ஸ் ராஜன்,மணிமாறன்,சாய் பூபதி
இசை :  சௌந்தர்யன்
இயக்கம் : ஏழுமலை
மக்கள் தொடர்பு : வெங்கட்
இப்படம் இன்றைய காலகட்டத்தில் ஏற்ற சரியான படம்