டைனோசர்ஸ் திரைப்பட விமர்சனம்

கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிட டைனோசர்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எம்.ஆர்.மாதவன்.

இதில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா, ஜானகி, அருண், அருள் பாலாஜி, கவின் ஜெய்பாபு உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கும் திரைப்படம் டைனோசர்ஸ்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-இசை-போபோ சசி , ஒளிப்பதிவு -ஜோன்ஸ் வி ஆனந்த், எடிட்டிங்-கலைவாணன், சண்டை-ஸ்டன்னர் சாம், பாடல்கள்-எம்.ஆர்.மாதவன், கலை-வலம்புரிநாதன், ஒப்பனை-தசரதன், நடனம்-தஸ்தா, த யாரிப்பு மேற்பார்வை-சஞ்சய் கிருஷ்ணன், தயாரிப்பு நிர்வாகி-கோகுல் ராம், பிஆர்ஒ-சதீஷ் ஏய்ம்.

சின்னகுழந்தையின் (ஜானகி) மகன்கள் தனா(ரிஷி) மற்றும் ஆற்றல்மண் (உதய்கார்த்திக்). தையல் தொழில் செய்யும் தனாவின் உயிர் நண்பன் துரை(மாறா) ரவுடி சாலையாரின் (மானேக்ஷா) அடியாள். சாலையாரும், கிளியப்பனும்(கவன் ஜெய் பாபு) இரண்டு கும்பலின் தலைவர்கள் என்பதால் பகை எப்போழுதும் இருக்கிறது. கிளியப்பனின் தங்கை கணவரை சாலையாரின் அடியாட்களுடன் சேர்ந்து துரை கொலை செய்கின்றான். இந்த கொலை நடந்து பல மாதங்களுக்கு பிறகு தனா நண்பன் துரைக்கு திருமணம் செய்து வைக்க அதன் பின்னர் ரவுடிஸத்தை விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்ய முடிவு செய்கிறான் துரை.இதனிடையே போலீஸ் கெடுபிடியால் சாலையாரிடம் கொலை செய்த எட்டு பேரை சரணடைய சொல்கின்றனர். வேறு வழியில்லாமல் சாலையார் எட்டு பேரையும் சரணடைய சொல்ல, அதற்கு திருமணம் செய்த காரணத்தால் துரை மறுக்கிறான். இதை கேள்விப்படும் தனா, நண்பன் துரையை காப்பாற்ற ஆள் மாறாட்டம் செய்து ஜெயிலுக்கு செல்கிறான். நண்பன் துரையை பார்த்துக் கொள்ளுமாறு தனா தன் தம்பி மண்ணுவிடம் சொல்கிறான். இந்நிலையில் கிளியப்பன் சாலையாரிடம் சமரசம் பேசி தர வேண்டிய வசூல் பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூற துரையும் கூட்டாளிகளும் அங்கு செல்கின்றனர். முதலில் கிளியப்பனுக்கு துரை யார் என்று தெரியாமல் இருக்க, பின்னர் துரை தான் தன் தங்கை கணவரின் சாவிற்கு காரணம் என்பதை தெரிந்து கொள்கிறான். அதன் பின்னர் துரையை கிளியப்பன் பழி வாங்கிறான், அதற்கு மண்ணுவும் ஒரு மறைமுக காரணமாக அமைந்து விடுகிறான்.

அவர்களை பழிக்கு பழி வாங்கினானா? கொலை செய்யாமல் அதை எப்படி சாமர்த்தியமாக செய்தான்? என்ன தண்டனை கொடுத்தான்? என்பதே க்ளைமேக்ஸ்.

நாயகன் உதய் கார்த்திக் மிக சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருக்கிறார். சாய் பிரியா, தேவா இருவருக்குமான காதல் காட்சிகள் சிறப்பு. முதல் பாதி முழுவதையும் மாறா அசத்தியுள்ளார். அவர் கொலை செய்யப்படும் முன்பு பேசும் வீர வசனங்கள் படத்திற்கு பலம்.

உடம்பு முழுவதும் வெட்டுப்பட்டு எழுந்து நின்று ஒரு ஆட்டம் போடுவார். அது எப்படி என்று தான் யூகிக்க முடியவில்லை மனைவிக்காக ஏங்கியது வாழ்க்கையை பார்த்து பயந்தது என கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார். கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கேற்ப சிறப்பாக செய்துள்ளார் அட்டு ரிஷி.

முதல் காட்சியிலேயே தனது கையில் வைத்திருந்த கத்திரிகோலை பிடித்து பேசும் வசனம் அருமை நட்பிற்காக செய்யும் செயல் தரம். அம்மாவாக நடித்த ஜானகி வீரநாச்சியராக வாழ்ந்துள்ளார். தனது கணவர், மகனின் வீரத்தை பேசும் போது தனது நடிப்பில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.இதில் நடித்த அனைவரும் சிறப்பாக தன் நடிப்பு கொடுத்து உள்ளனர்

போபோ சசியின் இசை மற்றும் ஜோன்ஸ் வி ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். தனித்துவமான பின்னணி இசையை கொடுத்து அசத்தியிருந்தார். இசையமைப்பாளர் போபோ சசி மொத்தத்தில் டைனோசர் வேகத்தை இன்னும் அதிக படுத்தியிருக்கலாம் இதில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர் பாராட்டு இயக்குனர்  நல்ல புதுமுக கதாபாத்திர தேர்வு  இன்றைய கால கட்டத்தின் வசனம், சரியான திரைக்கதை, அதிரடி ஆக்ஷன், காதல், நட்பு என்று அனைத்தும் மாஸாக  கிளாஸாக நகைச்சுவையுடன் கலந்து ரவுடியாக இறக்க விரும்பவில்லை நல்லவனாக வாழ நினைக்கிறேன் என்ற நல்ல நோக்கத்துடன் கொடுத்து விறுவிறுப்பான திருப்பங்களுடன்  படைப்பு இயக்குனர் எம்.ஆர்.மாதவன் க்கு பாராட்டு நல்ல எதிர்காலம் உள்ளது.

மொத்தத்தில் கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ள இப்படத்தை ரோமியோ பிச்சர்ஸ் வெளியிட டைனோசர்ஸ்  இன்றய  ரவுடியின் வாழ்க்கை தரமாக அழகாக ஆழமாக  சொல்லும் படம்.