டார்க் பேண்டசி பிஸ்கெட்டின் புதிய விளம்பர தூதராக

சென்னை: ஐடிசியின் நிறுவனத்தின் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி பிஸ்கெட்டின், புதிய விளம்பர தூதராக ‘கிங் ஆப் பேண்டசி’ என்று நடிகர் ஷாருக்கானை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அவருடன் அற்புதமான இந்த பயணத்தை தொடர இருப்பதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி பிராண்ட் அதன் நுகர்வோருடன் அற்புதமான தொடர்பை ஏற்படுத்தும் விதமாக புதிய தொலைக்காட்சி விளம்பரமான ‘சன்ஃபீஸ்ட் டார்க் பேண்டசி – ஒவ்வொரு மனதின் பேண்டசி’ என்னும் விளம்பரத்தையும் வெளியிட இருக்கிறது. இதில் உள்ள புதுமையான கருத்து நம் அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் கற்பனையை பற்றி விவரிக்கிறது. இந்த புதிய கண்ணோட்டத்துடன், பிராண்ட் பல்வேறு நுகர்வோர் பிரிவுகளை சென்றடையும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளது.  எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கற்பனையின் தனிப்பட்ட எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. அனைவராலும் மிகவும் விரும்பப்படும் நடிகர் ஷாரூக் கான், உலகம் முழுவதும் உள்ள அவரது எண்ணற்ற ரசிகர்களின் கற்பனையை உண்மையிலேயே இதில் பிரதிபலிக்கிறார்.