ராமர் பாலம் திரைவிமர்சனம்.

காதலின் வலிமையை சொல்லும்

காதலின் வலிமையை
சொல்லும்வகையில்
ராமர் பாலம் திரைப்படம்
தயாராகியிருக்கிறது.
டைரக்டர்கள் ஷக்தி சிதம்பரம், வின்செண்ட் செல்வா ஆகியோரிடம்
உதவி இயக்குனராக
இருந்த எம்.சண்முகவேல்
இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சினிமா
கம்பெனி சார்பாக டாக்டர்.கர்ணன்,மாரி யப்பன், எம்.முருகேசன்
இணைந்து தயாரித்துள்ள
இத்திரைப்படம் ஆகஸ்ட்
25 ம் தேதி திரைக்கு வந்து உள்ளது

ராமாயணத்தில் ராமர்
சீதை மீது கொண்ட காதலால் ராமர் பாலம்
உருவானது. அதேபோல்
தண்ணீர் நிறைந்தோடும்
ஆற்றங்கரையில் உள்ள
ஊர்களுக்கிடையே பாலம்
கட்ட நினைக்கிறார்கள்
ஊர் பொதுமக்கள்.ஆனால்
அரசியல்வாதிகள்,அதிகாரிகள் என முறையிட்டும் அது நடக்கவில்லை. ஒரு காதல் காரணமாக அந்த ஊருக்கு எப்படி பாலம் வந்தது என்பதே படத்தின் கதை. முற்றிலும் புதுமுகங்கள்
நடித்திருக்கிறார்கள்!

ஒளிப்பதிவை ஆனந்த்
சரவணன் மற்றும் காளிமுத்து மேற்கொள்ள,
படத்தொகுப்பை செல்வமணி
மேற்கொண்டுள்ளார்.
கோபால் இசையமக்க
கலைக்குமார்,கவிபாஸ்கர், டாக்டர்.கர்ணன் மாரியப்பன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளர். மக்கள்தொடர்பு பி.ஆர்.ஓ.வெங்கட். மன்னன் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கர்ணன்
மாரியப்பன், ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில் ஜெனிஷ் ஆகியோர்
இத்திரைப்படத்தை வெளியிட்டார்:

இப்படம் சமூதாய அக்கறையோடு எடுக்கபட்ட படம் இயக்குனர்க்கு ஒளிப்பதிவு கிராமத்தின் பசுமையும் ,மணல்வெளி ஆறுகளை அருமையாக பதிவு செய்து உள்ளார்  பின்னனி இசை சிறப்பாக அமைத்துள்ளார், இப்படத்த  தயாரித்த தயாரிப்பாளருக்கும் பாராட்டு:இப்படத்தில் பணியாற்றி அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் பாராட்டு 

இதில் நடித்த நடிகர்கள் நாயகன். நாயகி மற்றும் நாயகனுடன் நடித்த நண்பர்களும்  கிராமத்தின் ஊர்மக்களாக வாழ்ந்துள்ளனர் சிறப்பாக உள்ளது

இப்படம் அனைவரும் பார்க்கும் படமாக உள்ளது