அகில் அக்கினேனியின் அதிரடி உளவு த்ரில்லர் ‘ஏஜெண்ட்’ சோனி LIVல் பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது

அகில் அக்கினேனியின் அதிரடி உளவு த்ரில்லர் ‘ஏஜெண்ட்‘ சோனி LIVல் பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது

சென்னை: உளவு த்ரில்லர் பிரியர்களே, தயாராகுங்கள்! அகில் அக்கினேனியின் ‘ஏஜெண்டின்’ பிரத்யேக பிரீமியரை சோனி LIV பெருமையுடன் அறிவித்துள்ளது. அதிரடி அட்ரினலின் சாகச சினிமாக் கொண்டாட்டம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, இந்த ஸ்பை-த்ரில்லர் உங்கள் திரைகளில் மீண்டும் ஒருமுறை, செப்டம்பர் 29, 2023 முதல், சோனி LIVல் மட்டுமே.

புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான சுரேந்தர் ரெட்டியால் இயக்கப்பட்டுள்ள ஏஜென்ட், ரிக்கியைச் சுற்றி அமைந்த கதையாகும். ஒரு ஆர்வமுள்ள RAW ஏஜென்டான அவர், அவர் தி டெவில் என்றும் அழைக்கப்படும் RAW தலைவர் கர்னல் மகாதேவ் அவர்களால் ஒரு சவாலான பணிக்கு நியமிக்கப்படுகிறார். இந்தியாவை அழிக்க ஒரு பயங்கரமான திட்டத்தைக் கொண்டிருக்கும் ஒரு முன்னாள் RAW ஏஜெண்டான தி காட் என்று அழைக்கப்படும் தர்மா என்பவரை பிடிக்க ரிக்கி ஒரு ரூக்கியாக அவரது குழுவில் ஊடுருவ வேண்டும். ஆனால், இந்த பணி எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கும்போது என்ன நடக்கும்?

மம்முட்டி, டினோ மோரியா, சாக்ஷி வைத்யா, டென்சில் ஸ்மித் மற்றும் விக்ரம்ஜீத் விர்க் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன், ஏஜென்ட் ஆற்றல் நிரம்பிய நடிப்புப் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இயக்கத்திற்கு கூடுதலாக, படத்தின் திரைக்கதையையுமு; சுரேந்தர் ரெட்டி எழுதியுள்ளார், அதன் கதையை பிரபல எழுத்தாளர் வக்கந்தம் வம்சி எழுதியுள்ளார். ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் சுரேந்தர் 2 சினிமாவின் பதாகைகளின் கீழ் ராம்பிரம்மம் சுங்கரா, அஜய் சுங்கரா மற்றும் பதி தீபா ரெட்டி ஆகியோரால் இப்படம் தயாரிக்கப்பட்டது.

கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது – செப். 29 முதல் சோனி LIVல் மட்டும் ஸ்ட்ரீமிங் செய்யும் ஏஜெண்டின் துடிப்பான உற்சாகத்தை அனுபவிக்க தயாராகுங்கள்!

கருத்துகள்

சுரேந்தர் ரெட்டிஇயக்குனர்:

 ஏஜென்ட் மூலம்பிடிவாதமான கதைசொல்லல்உயர்ஆக்டேன் ஆக்ஷன் மற்றும் அழுத்தமான நடிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு அற்புதமான சினிமா அனுபவத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்இந்த அட்ரினலில் சாகச சவாரியை உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்களின் திரைகளுக்கு நேரடியாகக் கொண்டு வர சோனி LIV உடன் கூட்டு சேர்ந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்சில திகைப்பூட்டும் திருப்பங்களுக்கும் சஸ்பென்ஸுக்கும் தயாராகுங்கள்!”

அகில் அக்கினேனிநடிகர்:

ஏஜெண்டில் ரிக்கியின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மாறுபட்ட அனுபவமாக இருந்ததுஇந்தத் திரைப்படம் அனைத்தையும் கொண்டுள்ளது – தீவிரமான ஆக்ஷன்மனதைக் கவரும் திருப்பங்கள் மற்றும் வசீகரிக்கும் கதை என அனைத்தும் இதில்அடங்கும்படம் முழுவதும் வெளிப்படும் மர்மத்தின் கூறுகளால் பார்வையாளர்கள் கவரப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்சோனி LIVல் ஏஜெண்டின் OTT பிரீமியரைப் பார்க்க நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்பார்வையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே இந்த அற்புதமான அனுபவத்தைப் பெற முடியும்.

இணைப்பு: https://www.youtube.com/watch?v=EiplMBluP2s