கோவை பிலிம் மேட்ஸ் சார்பில் சிவராஜ் ஆர் மற்றும் சாய்கார்த்தி தயாரித்திருக்கும் மால் திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் குமரன். இப்படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதில் கஜராஜ், கதிர் வேடத்தில் அஸ்ரப், பிலிப்ஸாக தினேஷ் குமரன், கர்ணனாக சாய்கார்த்தி, யாழினியாக கவுரி நந்தா,கௌதமாக விஜே பப்பு,ஜெய் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : பத்மயன் சிவானந்தம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு : சிவராஜ் ஆர், மக்கள் தொடர்பு : சுரேஷ்சுகு மற்றும் தர்மதுரை.
தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை ஈடுபடுகிறது. அதே சமயம், சிலை கடத்தல்காரர் சாய் கார்த்திக்கிடம் இருந்து சோழர் சிலையை கைப்பற்ற ஒரு கும்பல் திட்டம் போடுகிறது. மறுபக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜராஜ் வீட்டில் திருடுவதற்கு அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் திட்டம் போடுகிறார்கள்.
ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத இவர்கள் சோழர் சிலையால் ஒரு வட்டத்திற்குள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட, அதனால் இவர்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள், அதில் இருந்து மீண்டார்களா, இல்லையா, சோழர் சிலை என்னவானது என்பதே படத்தின் மீதி கதை…
கஜராஜ், அஸ்ரப், தினேஷ் குமரன், சாய்கார்த்தி, கவுரி நந்தா, விஜே பப்பு, ஜெய் படத்தில் நடித்த அனைவருமே கடத்தல் சம்பந்தப்பட்ட கதையில் தங்களால் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளனர்.
இசை : பத்மயன் சிவானந்தம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு : சிவராஜ் ஆர் ஆகியோர் கடத்தல், சேசிங், நான்கு பேரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை காட்சிக் கோணங்களில் நேர்ந்தியாக கச்சிதமாக கொடுத்து அசத்தியுள்ளனர்.