சென்னை மாநகரில் தனது முதல் ‘மை விகேசி” ஸ்டோரைத் தொடங்கும் காலணிகள் தயாரிப்பில் புகழ்பெற்ற விகேசி குழுமம்

சென்னை: அக்டோபர் 13, 2023: காலணிகள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான விகேசி குழுமம் , பிரத்யேக பிராண்டு அவுட்லெட்ஸ் (EBOs) துறைக்குள் கால்பதித்திருக்கிறது. சென்னை மாநகரில் ரெட்ஹில்ஸ் – ல் தனது முதல் ஸ்டோரை தொடங்கியதன் வழியாக, இப்பிரிவில் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது. காலணிகள் விற்பனைக்கான இந்த பிரத்யேக பிராண்டு ஸ்டோர்கள், நாடெங்கிலும் “மை விகேசி” என்ற பெயரில் நிறுவப்படுகின்றன. விகேசி குழுமத்தின் தலைவர் திரு. விகேசி மாமெத் கோயா அவர்கள், மை விகேசி – ன் முதல் விற்பனையகத்தை இன்று திறந்து வைத்தார்.

பாரம்பரியமான வினியோக வலையமைப்பு மாதிரியை இதுவரை செயல்படுத்தி வந்த இந்நிறுவனம், அணுகுவசதி மற்றும் ஸ்டைல் ஆகிய அம்சங்களுடன் ஒரு புது யுகத்தை தொடங்குவதை விகேசி குழுமம் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பல பிராண்டுகளை ஒரே இடத்தில் விற்பனை செய்யும் விற்பனையகங்கள் வழியாக, வினியோகிக்கப்படும் பாரம்பரிய முறையை விகேசி குழுமம் பின்பற்றி வந்த நிலையில், இந்த புதிய நடவடிக்கை அதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுகிறது. தனது தயாரிப்பு காலணிகளின் விற்பனையும், வினியோகமும் எதிர்பார்க்கும் அளவை விட குறைவாக இருக்கும் இடங்களில் மை விகேசி ஸ்டோர்களை நிறுவுவதன் வழியாக தனது விற்பனை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தவும், விற்பனையை உயர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிடுகிறது.

விகேசி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. விகேசி ரஜாக், இந்த முக்கியமான நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில், “எமது பாரம்பரியமான வினியோக மாதிரியை வலுப்படுத்தும் அதே நேரத்தில், எமது பிராண்டின் பிரத்யேக அவுட்லெட்களை தொடங்குவதன் மூலம் ஒரு புதிய , துடிப்பான பயணத்தை தொடங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். தரத்தின் மீதும், வாடிக்கையாளருக்கு நேர்த்தியான சேவையை வழங்குவது மீதும் நீண்டகாலமாக எமது பிராண்டு கொண்டிருக்கும் பொறுப்புறுதிக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அத்துடன், தரமான காலணிகளுக்கான இந்திய குடிமக்களின் மாறுபட்ட தேவைகளை திருப்திகரமாக பூர்த்தி செய்யும் நோக்கத்தின் அடிப்படையில், காலத்தின் தேவைக்கேற்றவாறு ஒரு புதிய மாற்றத்தை நோக்கி எமது நிறுவனம் தன்னை தகவமைத்துக் கொள்ளும் நடவடிக்கையையும் இது சுட்டிக்காட்டுகிறது.” என்று கூறினார்.

விகேசி குழுமத்தின் முதல் “மை விகேசி” ஸ்டோர் அறிமுகத்தையொட்டி இந்திய திரைப்பட உலகின் ஜாம்பவான் திரு. அமிதாபச்சன் பங்கேற்பில் “மை விகேசி. மை ஸ்டோர்” என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு விளம்பர செயல்திட்டமும் தொடங்கப்பட்டிருக்கிறது.

விகேசி குழுமத்தின் புகழ்பெற்ற பிராண்டுகளான விகேசி பிரைடு, விகேசி டெபான், குட்ஸ்பாட், EEZY, #Debongo, மற்றும் Ja.May.Ka. உட்பட, அனைத்து பிரபல பிராண்டுகளும் மை விகேசி பிரத்யேக ஸ்டோரில் காட்சிப்படுத்தப்படுகின்றன. மை விகேசி ஸ்டோர்களின் வழியாக, இந்தியாவில் சாமான்ய மக்களின் காலணி தேவைகளை பூர்த்தி செய்ய இந்த பிராண்டு முற்படுகிறது. நியாயமான விலைகளில், சாமான்ய மக்களின் காலணித்தேவைகளை பூர்த்தி செய்கின்ற தரமான காலணிகளை பல்வேறு வகையினங்களில் இந்த ஸ்டோர்கள் விற்பனைக்கு வழங்கும். சான்டல்கள், ஓப்பன் வியர், வி-ஸ்ட்ராப்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷுக்கள், ஸ்லிப்-ஆன்ஸ், கிளாக்ஸ், ஸ்லைட்ஸ், ரோமன்ஸ், ஃபிளிப் ஃபிளாப்ஸ் ஆகிய வகையினங்களில் நவீன வடிவமைப்பில், ஸ்டைலான காலணிகளின் விரிவான அணிவரிசை இந்த ஸ்டோரில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பாதங்களுக்கு இதமான ஆர்த்தோகேர் காலணிகளும் இந்த ஸ்டோரில் கிடைக்கப்பெறுகிறது. தொடங்கப்பட்டு, ஏறக்குறைய 40 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் இந்நிறுவனம், “நேர்மையான விலை. விகேசி விலை” என்ற தாரக மந்திரத்தை முன்னிலைப்படுத்தி, மக்களது நெஞ்சங்களை கைவசப்படுத்தியிருக்கிறது.

 

அண்மை அமைவிட பிசினஸ் செயல்பாடுகளை ஊக்குவித்து, உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வது என்பதில் விகேசி குழுமம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியின் ஒரு பகுதியாகவே ‘மை விகேசி’ ஸ்டோர் செயல்திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. மை விகேசி ஸ்டோர், ஒரு ஃபிரான்சைஸ் மாதிரியை ஏன் பின்பற்றுகிறது என்பதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்று என்று இந்நிறுவனம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

 

விகேசி, #ShopLocal என்ற கருத்தாக்கத்திற்கு எப்போதும் ஆதரவாக செயல்பட்டு வந்திருக்கிறது. நாடெங்கிலுமுள்ள சிறிய மற்றும் நடுத்தர உள்ளூர் கடைகள் மற்றும் சிறு பிசினஸ் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் கோவிட் – 19 பெருந்தொற்று காலத்தின்போது #ShopLocal என்ற விளம்பர பரப்புரை திட்டத்தை நாடெங்கிலும் அறிமுகம் செய்து செயல்படுத்திய இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமை விகேசிக்கு உரியது.