சென்னையை சேர்ந்த ஸ்ரீநிதி கேப்பிட்டல் நிறுவனம் ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கியுடன் வணிக கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

 

சென்னையை சேர்ந்த ஸ்ரீநிதி கேப்பிட்டல் நிறுவனம் ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கியுடன் வணிக கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

தென்னிந்தியாவில் மேலும் 30 கிளைகளுடன் விரிவாக்கம் புரிய திட்டம்.

• 2024 ஆம் ஆண்டிற்குள் 300 கோடியிலிருந்து 600 கோடியாக வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு.

சென்னை, 02- டிசம்பர்-2023: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வணிக வாகனம் மற்றும் இரு சக்கர வாகனக் கடன்களில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்ரீநிதி கேப்பிடல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவின் முன்னணி சிறு நிதி வங்கியான ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கியுடன் வணிக கூட்டாண்மை அமைப்பதாக அறிவித்துள்ளது
ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கியின் நிர்வாக துணைத் தலைவர் திரு. ஹரி வெள்ளூர் மற்றும் ஸ்ரீநிதி கேபிடல் பிரைவேட் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. S. செல்லமணி ஆகியோர் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்துகொண்டு வணிக கூட்டாண்மை குறித்து அறிவித்தனர்.

2019 இல் நிறுவப்பட்ட ஸ்ரீநிதி கேபிடல் பிரைவேட். லிமிடெட், 2020ல் விரைவாகச் செயல்பட்டு குறுகிய காலக்கெடுவுக்குள் 304.53 கோடிகளை நிர்வாகத்தின் கீழ் ஈர்க்கக்கூடிய சொத்தாக எட்டியது.

இந்துஜா லேலண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட், டாடா கேபிடல் லிமிடெட் ஆகியவற்றுடன் குறிப்பிடத்தக்க கடன் கூட்டாண்மை இந்த வெற்றிக்கு பங்களித்தது. 50 கிளைகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டு, ஸ்ரீநிதி கேபிடல் நிதிச் சேவைத் துறையில் ஒரு முக்கிய பங்காளியாக உருவெடுத்துள்ளது.
ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி ஸ்மால் வங்கியுடனான இந்த வணிக கூட்டாண்மை ஸ்ரீநிதி கேபிட்டலின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதப்படுகிறது மேலும் நிர்வாகத்தின் கீழ் அதன் சொத்துக்களை விரிவுபடுத்துவதற்கான ஒரு மூலோபாய வழியை வழங்குகிறது.
நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பற்றி, ஸ்ரீநிதி கேபிடல் பிரைவேட் லிமிடெட்டின் மேலாண்மை இயக்குநரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திரு.S.செல்லமணி பேசுகையில், “தொழில்துறையில் ஸ்ரீநிதி கேப்பிடல் சவாலான காலங்களிலும் முன்மாதிரியான வசூல் புள்ளிவிவரங்களுடன்விரைவான வளர்ச்சியடைந்ததன் மூலம் துறை முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈ.எஸ்ஏ.எப் சிறு நிதி வங்கியுடனான எங்கள் கூட்டு எங்கள் விரிவாக்க இலக்குகளுடன் ஒத்துப்போகிறது, சிறிய டிரக் வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளுக்கு கடன்களை வழங்க திட்டமிட்டுள்ளோம், குறிப்பாக பாரம்பரிய வங்கிகள் மற்றும் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன்களைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொளும் சவால்களை மட்டு படுத்துவதில் இந்த கூட்டாண்மை அதிகம் கவனம் செலுத்துகிறது. எங்களின் விரிவாக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, தென்னிந்தியாவில் மேலும் 30 கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளோம், மேலும் 2024ஆம் ஆண்டுக்குள் எங்களது நிர்வாகத்தின் கீழ் சொத்து மதிப்பை 300 கோடியிலிருந்து 600 கோடியாக இரட்டிப்பாக்க இலக்கு வைத்துள்ளோம்” என்று கூறினார்.

விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாக, ஸ்ரீநிதி கேபிடல் தனது கிளை வலையமைப்பை 50லிருந்து 80 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது, அதன் செயல்பாடுகளை கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு விரிவுபடுத்துகிறது. திரு செல்லமணி, போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பில் அவர்களின் முக்கிய பங்கை வலியுறுத்தி, அடிமட்ட அளவில் ஆர்வமுள்ள தொழில்முனைவோரை ஆதரிப்பதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

2019 இல் நிறுவப்பட்டு 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கி சாரா நிதி நிறுவனமாக உரிமம் பெற்ற, திரு.S.செல்லமணி அவர்களின் தலைமையில் செயல்படும் ஸ்ரீநிதி கேபிடல் நிறுவனம், பயன்படுத்தப்பட்ட மற்றும் புதிய வணிக வாகன கடன் துறையில் கடந்த இருபது ஆண்டுகளாக விரிவான கடன் அனுபவத்தை கொண்டு வருகிறது.
ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கி பற்றி:

ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கி ஒரு முன்னணி சிறு நிதி வங்கியாகும். வங்கி அனுபவத்தை மறுவரையறை செய்வதில் உறுதிபூண்டுள்ள ஈ.எஸ்.ஏ.எப் சிறு நிதி வங்கியானது, இந்தியாவில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற மற்றும் வங்கியில்லாத பகுதிகள் உட்பட பல்வேறு புவியியல் பகுதிகளுக்கு சேவை செய்யும் அதே வேளையில், புதிய வங்கி இல்லாத மற்றும் குறைந்த வங்கிப் பகுதிகளுக்கு தனது வரம்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.