“மூன்றாம் மனிதன்” திரைப்பட விமர்சனம்

ராம்தேவ் பிக்சர்ஸ் சார்பில் ராம்தேவ் தயாரித்திருக்கும் மூன்றாம் மனிதன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராம்தேவ்.

இதில் இயக்குனர் கே பாக்யராஜ், சோனியா அகர்வால், ஸ்ரீPநாத், ராம்தேவ், ரிஷிகாந்த், பிரணா, சூது கவ்வும் சிவகுமார்,  ராஜகோபால், மற்றும் மதுரை ஞானம் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்: எடிட்டிங்  : துர்காஸ், தயாரிப்பு மேற்பார்வை : எஸ்.எம்.முருகேசன், ஆர்ட் டைரக்டர்; டி.குணசேகர், ஒளிப்பதிவு: மணிவண்ணன், பாடல்கள்;  ராம்தேவ், பாடல்கள் இசை : வேணு சங்கர்- தேவ் ஜி, பின்னணி இசை அம்ரிஷ், இணை தயாரிப்பாளர்கள் : மதுரை சி.ஏ. ஞானோதயா, டாக்டர் எம்.ராஜகோபாலன், டாக்டர் டி. சாந்தி ராஜகோபாலன், மக்கள் தொடர்பாளர் : வேலு.எஸ்.

காவல் அதிகாரியான சோனியா அகர்வாலின் கணவர் (ரிஷிகாந்த்) கந்தராஜ் என்பவர் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பார். அதனை விசாரிக்க வருகிறார் பாக்யராஜ், அப்படி அவர் விசாரிக்கும்போது பல திடுக்கிடும் அதிர்ச்சியான விஷயங்கள் கிடைக்கிறது. அது என்ன? என்பதை பரபரப்பான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக படமாக இன்றைய காலகட்டத்தின் நடக்ககூடிய மெசஜாகவும் சொல்வது தான் “மூன்றாம் மனிதன்”படத்தின் கதை..

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜின் அனுபவம் வாய்ந்த நடிப்பு கதைக்கு அதிகபலம் சேர்த்திருக்கிறது. கதையின் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் பிரணா, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். சோனியா அகர்வால் ஆரம்பத்தில் கவனம் ஈர்த்தாலும், அதன் பிறகு அவரது காட்சிகள் சில இடங்களில் வந்து போகிறது  இருந்தாலும், மக்கள் மனதில் நிறைவாக நிற்கிறார் மற்றும் இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பக நடித்துள்ளனர்

இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இசை : வேணு சங்கர்- தேவ் ஜி, எடிட்டிங்  :துர்காஸ், ஆர்ட் டைரக்டர்; டி.குணசேகர், பின்னணி இசை அம்ரிஷ் ஆகியோரின் பணிகள் சிறப்பாக அமைந்து உள்ளது

இக்கதை தேர்வு செய்து திரைப்படமாக்கிய மக்களுக்கு நல்லமெசஜாகவும் கொடுத்து உள்ளார் குடும்பத்துடன் பார்க்ககூடிய படமாக அமைந்துள்ளது. இயக்குனர் முயற்ச்சிக்கு பாராட்டுகள்