
பின்னணி இசையும் : இளையராஜா
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருட பகை இருக்க, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார். இதனால், அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கதாநாயகனை பழிவாங்க முயற்சிக்க, அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை எதார்த்தமாக கிராமத்து முரட்டு சண்டியர் வாழ்க்கையை சொல்வது தான் ‘வட்டார வழக்கு’.
டூலெட் படத்தின் கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் இதில் கிராமத்து முரட்டுசண்டியராகவும் கோபகாரனாகவும் அதே நேரத்தில் தனக்கு பிடித்த பெண்ணுடன் காதலை சொல்லும் விதம் இயல்பாக இருந்தது கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குபுறம் போகமல் வயல்வெளியில் சுற்றாமலும் காதலை சொல்லுகிற விதமே நம்மை ரசிக்கும்படியாக இருந்தது : கதாநாயகி கிராமத்து மண்வாசனை மாறாமல் நடித்திருக்கும் ரவீனா ரவி தொட்டச்சி என்ற வேடத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாவும் கண்ணால் காதல்பேசுவதும் எல்லோரும் ரசிக்கும்படியாக தன் நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்,நடிகைகள் அந்த ஊர் மக்கள் என்பதால்அனைவருடைய நடிப்பு
இயல்பாகவே இருந்தது
படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியன் மற்றும் டோனி சான் :கரிசல் காட்டின் செம்மண் காய்ந்த பூமியை அம்மண்ணின் மனிதர்களையும் நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார் .கிராமத்தின் அழகையும் அப்படியே நம் கண்முன் நிறுத்தி உள்ளார்கள் எடிட்டர்: படத்திற்க்கு தேவையான காட்சிகளை மட்டும் சரியாக சேர்த்தும் நேர்த்தியாக கொடுத்துள்ளார் :பின்னனிஇசை:இளையராஜா படத்திற்க்கு பக்கபலாக இருந்தது படத்திற்க்கு அடையாளமும் இருந்தது நம் மனதில் நீங்க இடம்பெற்ற அந்த காலகட்ட பாடல்கள் திரும்ப ஒலித்து நீண்ட இடைவெளி பிறகு ரசிகர்களின் வசந்தகாலமாக இருந்தது
கரிசல் காட்டின் மண்ணின் காதல் மற்றும் மோதலை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டு உள்ளது கதையில், இடம்பெறும் கதாபாத்திரங்களாக சினிமாதனம் இல்லாமல் அந்த ஊர் மக்களின் வட்டார பேச்சு வாழ்க்கை நடமுறையை அப்படிய அச்சு அசலாக நம் கண்முன்னே கொண்டு நிறுத்திவிட்டார். இயக்குனருக்கு பாராட்டுக்கள்
மொத்தத்தில் இந்த “வட்டார வழக்கு” இதுவரை பல கிராமத்து படம் வந்துயிருந்தாலும் சமீபகாலமாக நம் மண்ணில் மறைந்துவரும் நம் வாழ்வியலும் அடையாளத்தையும் சொல்லும் படமாக உள்ளது . இப்படம் குடும்பத்துடன் பார்க்கலாம் பார்க்கணும்.