தேடல் முடிந்தது! Castrol POWER1 MTVயில் இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டாரை வெளியிடுகிறது, வெற்றியாளர்களை அறிவித்துள்ளது

தேடல் முடிந்தது! Castrol POWER1 MTVயில் இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டாரை வெளியிடுகிறது, வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.

இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் – வெற்றியாளர்கள் அறிவிப்பு

வெற்றியாளர்: பில்லரிசெட்டி சாய் ரஹில்
1வது ரன்னர் அப்: ஜெகதீஸ் நாகராஜ்
2வது ரன்னர் அப்: பத்மினி மோகன் நாயர் சூர்யா

வெற்றியாளர்கள் மதிப்புமிக்க Castrol Honda LCR MotoGP™ குழுவின் ஐரோப்பாவில் உள்ள பந்தய களத்தில் பயிற்சி பெறுவார்கள்

1 ஜூன் 2024 அன்று இரவு 8:30 மணிக்கு MTV மற்றும் ஜியோ சினிமாவில் பிரத்தியேகமாக ஆக்ஷனைப் பாருங்கள்

சென்னை: Castrol POWER1 ஆனது Viacom18 உடன் இணைந்து இந்தியாவின் சிறந்த மோட்டார்சைக்கிள் திறமையாளர்களுக்கான பரபரப்பான தேடலைச் செய்து முடித்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள பிரபலமான கரி மோட்டார் ஸ்பீட்வே ரேஸ்ட்ராக்கில் Castrol POWER1 வழங்கும் இந்தியாவின் அல்டிமேட் மோடோஸ்டார் ஆன் MTVஐ நடத்தி முடித்துள்ளது. தேசத்தின் சிறந்தவர்களிடையே கடுமையான போட்டியைக் கண்ட இந்த அற்புதமான நிகழ்வில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பில்லரிசெட்டி சாய் ரஹில், பெங்களூரைச் சேர்ந்த ஜெகதீஷ் நாகராஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த பத்மினி மோகன் நாயர் சூர்யா ஆகியோரை இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மூன்று வெற்றியாளர்களும் வெகுமதியாக, ஐரோப்பாவில் உள்ள புகழ்பெற்ற Castrol Honda LCR MotoGP™ டீமின் பந்தய அமைவிடத்தில் பிரத்யேகப் பயிற்சி பெறுவதற்கான ஒரு அரிதான வாய்ப்பைப் பெற்றனர்.

இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டாரின் இந்த ஆற்றல் நிரம்பிய பயணம், ஆடிஷன்கள், தேர்வு, பயிற்சி மற்றும் இறுதிப் பந்தயங்களில் இருந்து வெற்றியாளர்களைத் தீர்மானிக்கும், பைக் ஆர்வலர் கரண் குந்த்ராவால் நடத்தப்பட்டது, MTVயில் 1 மணிநேர சிறப்பு எபிசோடிலும், ஜியோசினிமாவில் மூன்று எபிசோட் தொடரிலும் 1 ஜூன் 2024 அன்று இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.

டிசம்பர் 2023 இல் அறிமுகம் செய்யப்பட்ட Castrol POWER1 மற்றும் Viacom18 இன் இந்த உற்சாகமான முயற்சி, நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களைக் கண்டுபிடித்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த முதல்முறை முயற்சியானது, மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்தும் 50,000 ஆர்வமுள்ள ரைடர்களை ஈர்த்தது, இதில் பொறியாளர்கள், வணிகர்கள், மெக்கானிக்கள், மாணவர்கள், பெண்கள், தாய்மார்கள் உட்பட பல்வேறு பின்னணியில் இருந்து பங்கேற்பாளர்கள் உட்பட மற்றும் இந்தியாவின் பைக்கிங் சமூகத்தின் உணர்வு மற்றும் ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது. இதில், நுணுக்கமான தேர்வு செயல்முறை மூலம், 240 போட்டியாளர்கள் சென்னை, மும்பை, புதுதில்லி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்ற நகர ஆடிஷன்களுக்கு வருவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தீவிர ஆய்வு மற்றும் தொடர்ச்சியான உற்சாகமான சவால்களைத் தொடர்ந்து ULTIMATE 18 இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் பட்டத்திற்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த 18 இறுதிப் போட்டியாளர்களும், இந்தியாவின் மதிப்பிற்குரிய பந்தய மற்றும் பயிற்சி அகாடமியான RACR இலிருந்து இந்திய பந்தய ஜாம்பவான் ரஜினி கிருஷ்ணன் தலைமையில் கோயம்புத்தூரில் உள்ள சின்னமான காரி மோட்டார் ஸ்பீட்வேயில் மேம்பட்ட பயிற்சியைப் பெற்றனர். கடுமையான தொழில்முறை பயிற்சியுடன், இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டாரின் வெற்றியாளர்களைத் தீர்மானிக்க, FMSCI இன் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச மோட்டோ பந்தய சாம்பியன்ஷிப்பின் தரநிலைகளின்படி இறுதி ரெவ்-அப் பந்தயம் நடத்தப்பட்டது.

Castrol காஸ்ட்ரோல் இந்தியா லிமிடெட்டின் துணைத் தலைவர் மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் திரு. ரோஹித் தல்வார் அவர்கள், “இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் ஒரு அற்புதமான வெற்றியாகும், இது பைக் ஆர்வலர்களுக்கு நிபுணத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த இளம் ரைடர்ஸ் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஐரோப்பாவில் உள்ள Castrol Honda LCR MotoGP™️ குழுவுடன் பயிற்சி பெறும் அபாரமான வாய்ப்பை இப்போது பெற்றுள்ள எங்கள் வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த Viacom18 இன் பிராண்டட் உள்ளடக்கத்தின் தலைவர் திரு. விவேக் மோகன் ஷர்மா அவர்கள், “Viacom18 இல், தாக்கத்தை ஏற்படுத்தும் புதுமையான பிராண்டட் உள்ளடக்க தீர்வுகளை வடிவமைப்பதில் நாங்கள் அர்ப்பணித்துள்ளோம், TV மற்றும் OTT டிஜிட்டல் முழுவதும் அதிகபட்ச அணுகல் மற்றும் ஈடுபாட்டை உறுதிசெய்கிறோம். Castrol POWER1 உடனான எங்களின் கூட்டு முயற்சியானது, ‘இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார்’ என்ற ஒரு அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்க எங்களை வழிநடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி, முதல் முறையாக, மோட்டோ-ரேசிங் திறமையாளர்களுக்கான பரபரப்பான வேட்டையில் இந்தியாவை ஒன்றிணைக்கிறது. இந்த ஒத்துழைப்பின் மூலம், நாங்கள் இந்தியாவின் பைக்கிங் சமூகத்தின் திறமையை வெளிக்காட்டியது மட்டுமல்லாமல், ஆற்றல் நிரம்பிய பிராண்ட் அனுபவங்களை வழங்குவதில் செயதிட்ட கூட்டாண்மைகளின் செயல்திறனையும் நிரூபித்துள்ளோம்” என்று கூறினார்.

11 முறை தேசிய சாம்பியனான திரு. ரஜினி கிருஷ்ணன் அவர்கள், இந்தப் போட்டியில் போட்டியாளர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் திறமையும் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்த இளம் ரைடர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் அவர்களின் வளர்ச்சியைக் கண்டது பலனளிக்கும் அனுபவமாக உள்ளது. இந்தியாவில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் வளர்ச்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Castrol Honda LCR MotoGP™ குழுவின் உரிமையாளரும் முதன்மை பொறுப்பாளருமான லூசியோ செச்சினெல்லோ அவர்கள், “எங்கள் ஐரோப்பிய அமைவிடத்திற்கு வெற்றியாளர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முன்முயற்சியானது எல்லைகளைத் தாண்டி திறமையை வளர்ப்பதற்கான எங்கள் நோக்கத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது. இந்த ரைடர்களுக்கு உயர்மட்ட பயிற்சி மற்றும் நுண்ணறிவுகளை வழங்க நாங்கள் எதிர்நோக்குகிறோம், அவர்களின் முழு திறனை அடைய அவர்களுக்கு உதவுகிறோம்” என்று கூறினார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸில் Castrolலின் நீண்டகால பாரம்பரியம், உயர் செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்காக வடிவமைக்கப்பட்ட Castrol POWER1 லூப்ரிகண்டுகளை உருவாக்க வழிவகுத்தது. இந்தியாவின் அல்டிமேட் மோட்டோஸ்டார் திறமைகளை வளர்ப்பதற்கும், உலகளாவிய மோட்டார்ஸ்போர்ட் அரங்கில் இந்தியாவின் இருப்பை உயர்த்துவதற்கும் காஸ்ட்ரோலின் உறுதிப்பாட்டை உள்ளடக்கியுள்ளது.

About Castrol India Limited
Castrol India Limited is one of India’s leading lubricant companies with brands such as Castrol CRB, Castrol GTX, Castrol Activ, Castrol POWER1, Castrol MAGNATEC and Castrol VECTON, which are the brands of choice for millions of consumers and customers across the country. The Company also operates in select segments like High Performance Lubricants and metalworking fluids used in a wide variety of industries such as automotive manufacturing, mining, machinery, and wind energy. Castrol has a large manufacturing and distribution network in India with three blending plants and a distribution network of 350 distributors who reach consumers and customers through over 100,000 retail outlets. For more information, please visit www.castrol.co.in.

About Viacom18
Viacom18 Media Pvt. Ltd. is one of India’s fastest growing entertainment networks and a house of iconic brands that offers multi-platform, multi-generational and multicultural brand experiences. Viacom18 defines entertainment in India by touching the lives of people through its properties on air, online, on ground, in cinemas and merchandise. Its portfolio of 38 channels across general entertainment, movies, sports, youth, music and kids, genres delight the consumers across the country with its eclectic mix of programming. JioCinema, Viacom18’s OTT platform, is one of India’s leading streaming services and most popular destination for live sports. Viacom18 Studios has successfully produced and distributed iconic Hindi films and clutter-breaking regional films for over 13 years in India.

About RACR
Rajini Academy of Competitive Racing (RACR) is India’s top moto-racing Academy has graduated more than 3,000 Riders/Racers across the world since 2015. RACR is the brainchild of Rajini Krishnan, India’s most successful Motorcycle Racer, and the 11-time national champion.

For more information, please contact:
Kavita Nagavekar (+91 96191 38779), kavitan@avianwe.com
Anusha Banerjee (+91 96188 62312), anushab@avianwe.com