உலக இதய தினம் – சிம்ஸ் வாக் 4 ஹார்ட்.. இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை!

உலக இதய தினம் – சிம்ஸ் வாக் 4 ஹார்ட்.. இதய ஆரோக்கிய விழிப்புணர்வில் சிம்ஸ் மருத்துவமனை!

சென்னை. செப்டம்பர் 29.2024. உலக இதய தினத்தின் கருப்பொருள் “Use Heart for Action,” தனிநபர்கள் தங்கள் இதய ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்க ஊக்குவிக்கும் வகையில் இதய ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துக்றது. உலக இதய தினத்தை நினைவு கூறும் வகையில் சிம்ஸ் மருத்துவமனை சிம்ஸ் வாக் 4 ஹார்ட் என்னும் பெருநடை walkathon நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தமது அர்ப்பணிப்பை உறுதியாக எடுத்துக்காட்டுகிறது சிம்ஸ் மருத்துவமனை என்று சொல்லலாம்.

சிம்ஸ் வாக் 4 ஹார்ட் வாக்கத்தான் ஆனது வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தொடங்கி விஆர் மாலில் நிறைவடந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அட்டகத்தி தினேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி குறித்து நடிகர் அட்டகத்தி தினேஷ் பேசுகையில் இதய ஆரோக்கியம் என்பது முழுமையான நல் வாழ்க்கையின் முக்கிய அங்கம் ஆகும். சிம்ஸ் மருத்துவமனை நடத்தும் இந்த வாக் 4 ஹார்ட் என்னும் நிகழ்ச்சியின் முயற்சிகளுக்கு நான் உதவுகிறேன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடப்போம். இது குறித்து விவாதிப்போம். இதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறினார்.
எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி.பச்சமுத்து இதய நோய் குறிப்பிடத்தக்க அளவில் உலகளாவிய பிரச்சனையாக உள்ளது என்பதை மறக்க முடியாது. ஆனால் அறிவை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் மூலம் இந்த இதய நோய்களின் சுமையை கணிசமாக குறைக்க முடியும் என்றார்.
சிம்ஸ் மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி
சிம்ஸ் வாக்4 ஹார்ட் வாக்கத்தான் நிகழ்ச்சிக்கு பங்கேற்பாளர்கள் அதிகம் பேர் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் என்றார். மக்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதையும், வழக்கமான உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டு ஒவ்வொரு தனிநபரும் தங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஊட்ட நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். அதற்கேற்ப ஆரோக்கியமான சமூகத்தை வளர்ப்பதில் எங்களது உறுதியின் வலிமையை இந்த அர்ப்பணிப்பு மிக்க நிகழ்ச்சி வலுயுறுத்துகிறது.
இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் பல்வேறு வயதினர் கலந்து கொண்டனர். இதன் மூலம் ஆரோக்கிய விழிப்புணர்வு ஒற்றுமையாக அனைத்து வயதினரிடமும் இருந்ததை உணரமுடிந்தது. மேலும் இதய நோய் தடுப்பு பங்கேற்பாளர்களுக்கு இதய ஆரோக்கியம் குறித்த கல்வி கற்பிக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வழங்கப்பட்டன. சிம்ஸ் மருத்துவமனை நடத்திய சிம்ஸ் வாக் 4 ஹார்ட் SIMS Walk4Heart வாக்கத்தானின் வெற்றியானது உலக இதய தினத்தை செயலுக்கு பயன்படுத்து “Use Heart for Action” என்ற கருப்பொருளுடன் இணைந்து சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்திற்கான விழிப்புணர்வை அளிக்கும் வகையில் செயல்படுவதை மீண்டும் நிரூபித்துள்ளது.