எஸ். ஆர். எம். இயன்முறை மருத்துவக்கல்லூரி, எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியை மேம்படுத்தும் ‘க்ளோ’ என்ற புத்தகத்தை வெளியிட்டது.

எஸ். ஆர். எம்.  இயன்முறை மருத்துவக்கல்லூரி, எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,  ‘க்ளோ’ : குழந்தைகளின் நலனுக்கான வழிகாட்டி” (GLOW: Guiding the Little Ones’ Well-Being) என்ற புத்தகத்தை வெளியிட்டது. இதன் ஆசிரியர்  எஸ். ஆர். எம்.  இயன்முறை மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் டாக்டர். க. வடிவேலன்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICMR) நிதியுதவி பெற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புத்தகம், 0-12 மாத குழந்தைகளின் வளர்ச்சிக் கட்டங்களை பெற்றோர்கள் கண்காணிக்க உதவும் முக்கிய வளமாக செயல்படுகிறது.

க்ளோ’, வளர்ச்சியைக் கண்காணிக்கும் சிக்கலான செயல்முறையை எளிதாக்கி, ஆதாரத்திற்கான, வழிகாட்டுதலை பெற்றோர்களுக்கு வழங்குகிறது. இந்த புத்தகம், குழந்தைகளின் வளர்ச்சி தாமதங்களை முதற்கட்டத்திலேயே கண்டறிந்து, குழந்தைகளின் எதிர்காலத்தை நேர்மறையாக வடிவமைக்க உதவுகிறது.

இந்த புத்தகத்திற்காக வடிவமைக்கப்பட்ட ‘பாரெண்டல் ஐ’ (Parental Eye) என்ற செயலி, பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு நேரடித் தகவல்கள், வளங்கள் மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் ஒரு செயல்திறன்மிக்க செயலியாக விளங்குகிறது. ‘க்ளோ’: குழந்தைகளின் நலனுக்கான வழிகாட்டி – வெற்றிகரமாக வெளியிடப்பட்டதுடன், ‘பாரெண்டல் ஐ’ செயலியின் அறிமுகமும் நிகழ்வை சிறப்பித்தது.

“குழந்தையின் ஆரம்ப ஆண்டுகள், அவர்களின் அறிவு, உடல் மற்றும் உணர்ச்சி வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைக்கிறது. ‘க்ளோ’, பெற்றோர்களுக்கு அவசியமான அறிவினை வழங்கி, அவர்களின் குழந்தையின் நலனுக்கு ஆதரவளிக்க உதவுகிறது,” என்று டாக்டர். க. வடிவேலன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நிதி ஆயோக் உறுப்பினர், டாக்டர். விஜய் குமார் சரஸ்வத் கலந்து கொண்டார். 

பிசியோதெரபி தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அவர், “1982-ஆம் ஆண்டிலிருந்து நான் பிசியோதெரபியின்

முக்கியத்துவத்தை கண்டுள்ளேன்,” என்று குறிப்பிட்டார்.

 

எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கல்விசார் கூடுதல் நிர்வாகி, டாக்டர். பா. சத்தியநாராயணன் நிகழ்வில் உரையாற்றியபோது, “இந்த புத்தகம் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பயனளிக்கும் ஒரு முக்கிய வளமாக திகழும், மேலும், எங்கள் முன்னாள் மாணவர்கள் நாடு முழுவதும் மற்றும் உலகளவில் விளையாட்டுத் துறை மருத்துவம் மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள்,” என்று பாராட்டினார்.

 

எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர், டாக்டர். செ. முத்தமிழ்ச்செல்வன், சிறப்புரையாற்றியபோது, ஆரம்ப குழந்தை வளர்ச்சியின் முக்கியத்துவத்தை மற்றும் குழந்தை வளர்ச்சியை நன்றாக பராமரிக்கத் தேவையான அறிவை பெற்றோர்களுக்கு வழங்குவதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

மேலும், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்:

 

~ டாக்டர். எஸ். பொன்னுசாமி, பதிவாளர், SRMIST- காட்டாங்குளத்தூர்

~ டாக்டர். நிதின் எம். நகர்கர், துணைவேந்தர் (MHS) பொறுப்பு மற்றும் எஸ். ஆர். எம். மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர்

~ டாக்டர். ஏ. சுந்தரம், ஆலோசகர், எஸ். ஆர். எம். மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல்

~ டாக்டர். டி. நாராயண ராவ், நிர்வாக இயக்குனர் ( எஸ். ஆர். எம். கல்வி குழுமம்)

~ டாக்டர். எஸ். சுப்பிரமணியன், நிஷ்டா நிறுவனம், மேலாண்மை இயக்குனர்

~ டாக்டர். டி. எஸ். வீரகௌதமன், முதல்வர், எஸ். ஆர். எம்.  இயன்முறை மருத்துவக்கல்லூரி

க்ளோ’ புத்தகம் ஆதார அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் எளிய மொழியை கொண்டுள்ளதால், பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு ஒரு 

அத்தியாவசிய வழிகாட்டியாக மாறுகிறது, ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது.

Please find attached the press release along with photos from the event. We kindly request your support in sharing this important matter.

Thank you for your attention and cooperation.

Warm regards,