பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் சார்பில் துவங்கப்பட்ட பிரிவான . முக்குலத்தோர் பாதுகாப்பு படை இந்த கண்டன போராட்டத்தை முன்னெடுத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 29 /12 / 2019 மாலை 3.30 மணியாவில் தொடங்கியது.
ஆன்மீகத்தை காக்க சைவமும் வைணவமும் ஓன்றினைவோம் முக்குலத்தோர் பாதுகாப்பு படை
தெய்வீகத திருமகன் பசும்பொன் உ .முத்துராமலிங்கத் தேவர் பற்றி சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பகிரும் குற்றவாளிகளை கண்டித்தும் மற்றும் தமிழ்நாடு அரசு தெய்வீகத்தை அழிக்க நினைக்கும் சமூக விரோதிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்றது.
*பசும்பொன் தேவரை இழிவுப்படுத்தி*
*சமூக வலைதளங்களில் பரப்புவோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் !*
*முக்குலத்தோர் பாதுகாப்பு படை வழக்கறிஞர் எஸ்.கே.சாமி தேவர் கண்டனம் !
இது தொடர்பாக ஆர்பாட்டத்துக்குத் தலைமைத் தாங்கிய அந்த அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் எஸ்.கே.சாமி தேவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது :-
பசும்பொன் முத்து ராமலிங்கம் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்துக்கு மட்டும் பாடுப்பட்டவரல்ல.
அனைத்து சமுதாயத்துக்கும் பாடுப்பட்ட தேசியத் தலைவர்.அனைத்து
மதத்துக்கும் பொதுவானவர்.
முஸ்லிம் பெண்மணி ஒருவரிடம் தாய்பால் குடித்து வளர்ந்தவர்.
,கிறிஸ்தவர்கள் நடத்திய பள்ளியில் படித்து உயர்ந்தவர்,
தேசியத்தையும், தெய்வீகத்தையும் இருகண்களாக பாவித்து ஆன்மீக வழியில் அரசியல் நடத்தியவர்.
வீரமும், விவேகமும் மிக்க பசும்பொன் தேவர், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய போது அதற்கு ஆதரவளித்தார்.
தனது தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்து சென்றவர்.
தனது சொத்துக்கள் பலவற்றை தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு வழங்கியவர்.
இப்படி அனைத்து சமுதாயத்துக்கும் பல நன்மைகளை செய்த
பசும்பொன் தேவரை சமீபகாலமாக தவறாக சித்தரித்து, அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இழிவுபடுத்தி
,பேஸ்புக்,வாட்ஸ் அப் உள்ளிட்ட
சமூக வலைத் தளங்களில்
சில சமூக விரோதிகள் பதிவிட்டும்,பரப்பியும் வருகிறார்கள்.
நாட்டுக்கு -மக்களுக்கு உழைத்த எந்த ஒரு தலைவரையும் இப்படி ஆபாசமாக, இழிவாக சித்தரிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்து மத கடவுள்களையும்,
இந்து மதத்தையும் விமர்சித்து பேசுவததை போல, பசும்பொன் தேவரை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.
இதனை அனுமதிக்க முடியாது.
தமிழக அரசும் ,
காவல்துறையும் உடனடியாக தலையிட்டு சமூக விரோதிகள்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்த நேரிடும் இவ்வாறு அவர் தெரிவித்தார்
இதில் கலந்து கொண்டவர்கள் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவரரும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான டாக்டர் எஸ்.கே.சாமி தலைமையில் பல தலைவர்கள் மற்றும் தெய்வீகத்தை ஆதரிக்கும் தேவர் ஐயாவின் பற்றாளர்களும் , ஏனைய பொது மக்களும் கலந்து கொண்டனர்.