‘ஜீவி-2’திரைப்பட விமர்ச்சனம்

வெங்கட் பிரபு- சிம்பு கூட்டணியில் ‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ‘ஜீவி.’

இயக்குநர் V.J.கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது இந்த ‘ஜீவி-2’ உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.தயாரிப்பு – வி ஹவுஸ் புரொடக்சன் – சுரேஷ் காமாட்சி, இணை தயாரிப்பு – வெற்றிகுமரன், நாகநாதன் சேதுபதி, எழுத்து இயக்கம் – V.J.கோபிநாத், இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு – பிரவீண் குமார், படத் தொகுப்பு – பிரவீண் கே.எல்., சண்டை பயிற்சி இயக்கம் – சுதேஷ், பத்திரிகை தொடர்பு – A.ஜான்.

கதைகளம விதியின் விளையாட்டு

இந்தப் படத்தோட புரட்யூஸர். ஃபர்ஸ்ட் பார்ட் பார்க்காமல் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ஜீவி-2 படத்தின் கதைக்குள் ஸ்ட்ரெயிட்டா உள்ள வர்றவங்க குழம்பிடக் கூடாது என்பதற்காக, டைட்டில் போடும் போதே ‘வாய்ஸ் ஓவரில்’ முன் கதை சுருக்கம் சொல்லி ஜீவி முடிஞ்ச இடத்துல இருந்து ஜீவி 2 படத்தோட கதை தொடருது அவனது திருமண வாழ்க்கையை (வெற்றி) சரவணனுக்கு இருந்த முக்கோண விதி பிரச்னை முடிந்து விடும் என்று நினைத்து கவிதாவை திருமணம் செய்து ஆரம்பிக்கிறார். பேச்சிலர் வாழ்க்கையில் எப்படி வேணாலும் இருக்கலாம்… கல்யாணத்துக்கு அப்புறம், அப்படி இருக்கமுடியுமா.!? ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். அப்படி தொடங்கிய சந்தோஷமான வாழ்க்கைக்குள் திடீரென்று சரவணனின் அக்கா மகளுக்கு இவரின் மனைவியை போலவே கண் தெரியாமல் போகிறது, முடிந்து போன முக்கோண விதி மீண்டும் இவரின் வாழ்க்கைக்குள் தொடருகிறது. மனைவியின் மருத்துவச் செலவைச் சமாளிக்க கார் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிகிச்சைக்கு பெரும் பணம் தேவைப்பட, அப்போது பார்த்து அவரது கார் பழுதாக, மனைவியின் சொத்து கடனில் முழுக, அக்கா மகள் நோயில் விழுவது என பிரச்சினை மேல் பிரச்சினை. மனைவிக்கு கண் ஆபரேஷன், மாமனாருக்கு மருந்து செலவு, மளிகை வாங்க பணம்னு பணத் தேவைகள் கழுத்தை நெருக்குது. மீண்டும் திருட முடிவு செய்து நண்பன் மணியுடன் (கருணாகரன்) சேர்ந்து அப்போதுதான் புதிதாக அறிமுகமான பணக்காரர் முபஷ்ஷிர் வீட்டில் திட்டமிட்டு  திருடுகிறார் சரவணன். கொள்ளை நடந்த அடுத்த நாள் முபாஷிர் கொலையாகிக் கிடக்கிறார். அங்கிருந்து தொடர்பியல் ‘விதி’ துரத்த ஆரம்பிக்கிறது. முக்கோண விதி எந்த அளவிற்கு உச்சத்திற்கு சென்றது? இதனை சரவணன் சமாளித்தார?  கதநாயகன் விதியை  புத்திசாலியாக அடுத்தது என்ன நடக்கும் என்பதை கண்டு பிடிக்க..
  எப்படி என்பதை தெரிந்து கொள்ள படம் பார்க்க வேண்டும்!
சரவணன் (வெற்றி) கதாபாத்திரத்திற்குள் நடுத்தர மக்களின் வாழ்க்கையாகவே வாழ்கிறார். கருணாகரன், அஷ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, முபாஷிர், ஜவஹர், அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக அத்தனை பேரும் கதைக்கு நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் ஆக்ஷன் (சுதீஷ்), கலை இயக்குனர் (உமேஷ் ஜே குமார்), நடன இயக்குனர் (அப்சர்), எடிட்டிங் (பிரவீன் கே.எல்), ஒளிப்பதிவு (பிரவீன் குமார்) மற்றும் இசை (சுந்தரமூர்த்தி கே.எஸ்) ஆகியோர் பங்களிப்பு சுவாரஸ்யத்தை கூட்டி கூடுதல் பலம் சேர்க்கிறது.
பொருத்தமான கதைக் களத்துடன் ஜீவி 2 இரண்டாம் பாகத்தை மிக விறுவிறுப்பாகவும், க்ளைமாக்ஸ் நெருங்குகையில் மூன்றாம் பாகத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களை பார்க்க வைக்க தெளிவாகக் காட்டி இயக்கியுள்ளார் இயக்குனர் கோபிநாத். நபாராட்டு
மொத்தத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் ஜீவி 2 எல்லோரும் வாழ்க்கை யில் விதி எப்படி விளையாடுகிறது ஒவ்வொருக்கும் நடக்கும் பிரச்சனை எப்படி தொடங்கி எப்படி முடிகிறது என்பதை அழகாகவும் அழுத்தமாகவும்  திரிலிங்காவும்,   த்ரில்லர் சொல்லபட்டுயிருக்கிறது இப்படம் அனைவரும் பார்க்கவே ண்டிய படம்