Indian Bank Conducts Mega Road show on CASA Campaign in Chennai
Chennai, 21st January 2023: Indian Bank today organized a Walkathon led by Mr Mahesh Kumar Bajaj, Executive Director to create awareness among the existing customers as well as general public at Annanagar, Chennai. More than 350 staff members, including senior officials from Corporate office, Field General Manager Office, Chennai and nearby Zonal offices of the Bank participated in the campaign displaying banners and placards on various deposit products offered by the Bank.
Staff members interacted with joggers and morning walkers in the Annanagar Roundana and Park area and explaining to the general public about array of products viz., Ind Shakti Term Deposit for 555 days and other Deposit / Digital products etc. Pamphlets with information on Bank’s products and Tab Banking Facility were also distributed.
Olympian Shri Vasudevan Baskaran, Padmashree Awardee, Captain of Indian Hockey Team which won Gold Medal at Moscow Olympics and Olympian Ms Manjima Kuriakose, Asian Games Gold Medalist, graced the occasion as Special guests.
இந்தியன் வங்கி சென்னையில் காசா பிரச்சாரத்தில் மெகா ரோட் ஷோ நடத்தியது
சென்னை, 21 ஜனவரி 2023: இந்தியன் வங்கி இன்று சென்னையில் அண்ணாநகர் பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செயல் இயக்குநர் திரு மகேஷ் குமார் பஜாஜ் தலைமையில், நடைபயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. வங்கி வழங்கும் பல்வேறு வைப்புத் நிதித் திட்டங்கள் குறித்த பதாகைகளையும் மற்றும் விளம்பரப் பலகைகளையும் தாங்கிய வண்ணம் கார்ப்பரேட் அலுவலகம், களப் பொது மேலாளர் அலுவலகம், சென்னை மற்றும் வங்கியின் அருகிலுள்ள மண்டல அலுவலகங்களில் உள்ள மூத்த அதிகாரிகள் உட்பட 350 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.
பணியாளர்கள் அண்ணாநகர் ரவுண்டானா மற்றும் பூங்கா பகுதியில் காலை நடைபயிற்சி செய்பவர்களுடன் உரையாடி, 555 நாட்களுக்கான இந்த் சக்தி கால வைப்பு நிதி மற்றும் பிற வைப்பு நிதிகள் / டிஜிட்டல் பொருட்கள் போன்ற நிதித்திட்டங்கள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கினர். வங்கியின் நிதித்திட்டங்கள் பற்றிய தகவல்களுடன் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் டேப் (TAB) வங்கிப் பரிமாற்ற வசதி குறித்த விவரங்களும் வழங்கப்பட்டது.
தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டனும் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவருமான திரு வாசுதேவன் பாஸ்கரன் அவர்களும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றவருமான திருமதி மஞ்சிமா குரியகோஸ் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாகக் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.