“ரெட் சாண்டல் வுட்” திரைப்பட விமர்சனம்.

ஜெஎன் சினிமாஸ் சார்பில் ஜெ.பார்த்தசாரதி தயாரிப்பில் ரெட் சாண்டல் வுட் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் குரு ராமானுஜம்.

இதில் வெற்றி (பிரபாகரன்), தியா மயூரிக்கா (வினிதா), கேஜிஎப் ராம் (ஹரிமாறன் ஷ), எம் எஸ் பாஸ்கர் (முத்தையா), கணேஷ் வெங்கட்ராமன் (ராமைய்யா), மாரிமுத்து (இளவரசு), கபாலி விஷ்வந்த் (கருணா), ரவி வெங்கட்ராமன் (எஸ்.பி), மெட்ராஸ் வினோத் (தீனா), வினோத் சாகர் (புரோக்கர் பாஸ்கர்), லட்சுமி நாராயணன் (நரசிம்மன்), சைதன்யா, விஜி, அபி, கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் .

தொழில்நுட்ப கலைஞர்கள் :இசை –  சாம் சி எஸ், பாடல்கள் – யுகபாரதி ,கேமரா – சுரேஷ் பாலா,சவுண்ட் டிசைன் – ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டி, எடிட்டிங் –  ரிச்சர்ட் கெவின்,சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன், மக்கள் தொடர்பு : மணவை புவன்

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான கர்ணனை (கபாலி விஷ்வந்த்) குடும்ப கஷ்டத்திற்காக தந்தை , தங்கைக்கு தெரியாமல் ஆந்திராவில் செம்மரக் கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார். சில மாதங்கள் அண்ணன் விஸ்வந்திடம் இருந்து எந்த தகவலும் வராததால் தங்கை தன் காதலன் வெற்றியிடம் கண்டுபிடித்து தருமாறு சொல்கிறார். விஸ்வந்தை தேடுவதற்கு  திருப்பதிக்கு செல்கிறார். திருப்பதி செல்லும் வழியில் தனக்கு தெரிந்த நண்பனின் லாரியில் ஏற அதில்செம்மரம் இருக்க, அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று செம அடி கொடுத்து விசாரிக்கப் படுகின்றனர். அனைவருமே ஏஜெண்ட் மூலம் செம்மரம் வெட்ட வந்ததாகவும், யார் இதற்கு பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெரியாது என்று கூறுகின்றனர். போலீஸிற்கு உண்மையில் யார் செய்தார்கள் என்று தெரிய வந்தாலும், அதிகாரம், பணம் மூலம் அதை மறைத்து கைது செய்யபட்டவர்களை என்கவுண்டர் செய்ய திட்டமிடுகின்றனர். இதை உணரும் வெற்றி  அங்கிருந்து தப்பிக்கிறார். செம்மரக் கடத்தல்  தலைவன் கேஜிஎஃப் ராம் தான் நண்பனை கடத்தி வைத்துள்ளார் என்பதையறிந்து தனி ஆளாக அவனை எதிர்க்கச் செல்கிறார். இறுதியில் வில்லன்களிடமிருந்து தன் நண்பன்; விஸ்வந்தை வெற்றி காப்பாற்றினாரா? தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தாரா?என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

தமிழர்களின் வாழ்வாதாரம் வலி என்ன என்பதைப் பேசுகிறது அறிமுக இயக்குநர் குரு ராமானுஜத்தின் ‘ரெட் சாண்டல் வுட்’ திரைப்படம்.

கதாநாயகன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் வெற்றி உலகம் தெரியாதஅப்பாவி  பிள்ளையாக பிரச்சனையில் சிக்கி மாட்டி  போலீஸ்டயில் அடிவாங்கும்  காட்சி உருக்கமாக எதார்ததமான  நடிப்பு நம் மனத்தில் நிற்கிறது.

இரண்டாம் பாதியில் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கும்  நாயகன் நடிப்பு அசத்தியுள்ளார்.

கதாநாயகி தியா மயூரி நான்கு ஐந்து  காட்சிகளுக்கு மட்டும் வந்து  விட்டு மறைந்து விடுகிகிறார். கே.ஜி.எஃப்’ ராம் சில இடங்களில் மட்டும் மிரட்டுகிறார். கபாலி விஷ்வந்த், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு சிறப்பாக  செய்திருக்கிறார்கள்.இவர்களுடன் ஆந்திரா போலீஸ்காரர் கணேஷ் வெங்கட ராம் தன் நடிப்பை நேர்த்தியாக செய்துள்ளார் . வினோத் சாகர், (மறைந்த)மாரிமுத்து,  ரவி வெங்கட் ராமன் ஆகியோர்  கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள் .

படத்திற்குப் பிரதான பலமாக சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு உள்ளது. வனப்பகுதியில் நடக்கும் இரவு நேரச் சண்டைக்காட்சிகளில் அவரின் உழைப்பை உணர முடிகிறது. பாடல்களில் சாம் சி.எஸ் சோபிக்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் சில ‘விறுவிறு’ காட்சிகளுக்கு மட்டும் கைகொடுத்திருக்கிறார சில இடங்களில்  இசையால் காதை அடைக்க வைக்கிறார். ஏ.ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பில் மொத்த படமும் வேகமா ஓடுகிறது.

செம்மரக்கடத்தலுக்குப் பின்னால் உள்ள அரசியல் – வனத்துறை ,ரவுடிகள் கூட்டணி, வறுமையில் வாழும் அப்பாவி தமிழர்களின் கொல்லப்படும் அவல நிலையை மைய்யா கரு கதைகளமாக வைத்து பேசுகிறது இதுவரை யாரும் சொல்லாதகதைகளம் இப்படம் திரைகதையில் இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லி இருக்கலாம்! முதல் படத்தில் முத்திரை பதிக்க இயக்குனர் முயற்ச்சி இவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது .

ரிட் சாண்டல் அனைவரும் பார்க்கும் படமாக உள்ளது.