“ஸ்ட்ரைக்கர்” திரை பட விமர்சனம்

தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்கம்: எஸ் ஏ பிரபு ;இசை சித்தார்த்: தயாரிப்பு: ஹென்றி டேவிட் IR ஜஸ்டின் விஜய் R;   மக்கள் தொடர்பு:ரியாஸ்கே அகமது.

படத்தை பற்றி பேசுவோம்; லருக்கும் இன்றும் எல்லோரையும் பயம் ஏற்படுத்தும் பேய் என்பதே உண்மையில் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கே பதில் இதுவரை இல்லை  ஆனால், இந்த ஒயிஜா போர்டை வைத்து ஆவிகளுடன் பேச முடியும் என்று பெரும்பாலானோர் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையில் இயங்கும் நவீன முறையில் ஆவிகளோடு பேசும்  பயிற்சிக் பள்ளியில்  பயிலும் ஒருவனுக்கும் ( (ஜஸ்டின் விஜய்), அவனைத் தனது யூ டியூபுக்காக பேட்டிகாண வரும் பெண்ணுக்கும் ( வித்யா பிரதீப்) நட்பு ஏற்பட, இருவரும் செத்துப் போன ஒருவரின் ஆவி இருக்கும் வீட்டுக்குள் அந்த ஆவியுடன் பேசப் போகிறார்கள் . அப்போது ஆவிப் பயிற்சியாளர் ( கஸ்தூரி) கொடுக்கும் அறிவுரைகளை மீறி அவர் இயங்க ஆவி செயல்பட மறுக்கிறது  .வீட்டில் அமானுஷிய சம்மந்தமான செயல்களை செய்கிறார். அப்போது அங்கு எதிர்பாராத பிரச்சனையில் ஜஸ்டின் விஜயும் வித்யா பிரதீபும் மாட்டிக்கொள்கின்றனர். இறுதியில் அந்த பிரச்னையிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே ஸ்ட்ரைக்கர் படத்தின் மீதி கதை.

அதன் பிறகு நடப்பதெல்லாம் திடீர் திருப்பங்களாக அமை கின்றன.இப்படிக்கூட நடக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு கிளைமாக்சை யாரும் எதிர்பாரத முடிவாக இருந்தது.

ஹீரோ ஜஸ்டின் விஜய், நடிப்பில் இன்னும் பயிற்ச்சி  தேவை கதைக்கேற்ற நாயகனாக  ஜொலித்திருந்திருக் கலாம்.காட்சிகளில்  பல இடங்கள் இருந்தும் ஜஸ்டின் விஜய் அதை சரியாக பயன்படுத்த தவறி படத்தின் ஓட்டத்தைக் பாதித்து  விட்டார்.

சோசியல் மீடியாவில் மட்டுமே ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அமானுஷ்ய பாடம் நடத்தும் ஆசிரியையாக நடித்திருக்கிறார். பேய் மற்றும் ஆன்மா பற்றி அவர் தரும் விளக்கங்களால் நமக்கே ஒயிஜா போர்ட் எங்கே கிடைக்கும் என்று தேடி வாங்க வைத்து விடுவராக உள்ளது

சித்தார்த் பின்னனி இசை  யாரையும் பெரிதாக பயமுறுத்தவில்லை

ஜே.எம்.ராப்ரி நாத் டார்க் ரூம் காட்சிகள் அச்சமூட்டுகிறது.

இயக்குனர் எஸ். ஏ.பிரபு விளக்கம் சொல்லியே காட்சி களை நகர்த்துவதால் ஆர்வம் குறைகிறது. சொன்னதற்கும் எடுத்த படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது

சொல்ல வந்ததை திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்  படம் ஓடுவது என்னவோ ஒன்றரை மணி நேரம்தான் இயக்குனர் முயற்ச்சிக்கு பாராட்டு ! இப்படம் பார்க்க பொறுமை தேவை