ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் கருத்தரங்கம் -தொழில் சார்ந்த ஆரோக்கிய சேவைகள் பற்றி
ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற பணி இடங்களில் தொழில் சார்ந்த ஆரோக்கிய சேவைகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கினை தொழில் சார்ந்த ஆரோக்கிய அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் டாக்டர் ஜெயராஜ் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும், நூற்றுகணக்கான தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொழில் சார்ந்த மருத்துவம் மற்றும் சுகாதாரம், மறுவாழ்வு சேவைகளில் உள்ள முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் பற்றி விவாதிக்க தொழில் சார்ந்த சுகாதார சேவைகள் என்பது பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.திருமலை மிஷன் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் முருகப்பா குரூப்ஸ், டாடா இன்டர்நேஷனல், கோஸ்டல், பன்ஸ்கூல், ஸ்டீல்1,திருமலை கெமிக்கல்ஸ், அல்டிராமறைன் அண்ட் பிக்மெண்ட்ஸ், ஸ்டாஹல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் முதுநிலை அலுவலர்கள், நிர்வாகிகள், பிரதிநிதிகள் என 60க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தொழில் சார்ந்த ஆரோக்கிய சேவைகளை மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் மற்றும் சவால்கள் பற்றி கருத்து பரிமாறிக்கொண்டனர்.
கருத்தரங்கு தொடக்க விழாவிற்கு திருமலை மிஷன் மருத்துவமனை தலைமை செயல் இயக்குனர் ஆனந்த் ரங்காச்சாரி தலைமை வகித்து பேசுகையில் திருமலை மிஷன் பவுன்டேசன் மூலமாக நடத்தபட்டு வரும் திருமலை மிஷன் மருத்துவமனை சமூக அக்கறையுடன் பின்தங்கிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை அளித்து வருகிறது.மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள மெட்டல், ஸ்டம்பிங் தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் காயம் அடைந்து வருபவர்களுக்கு சிறப்பான முறையில் சிறந்த மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்து வருகிறோம்.
அரசு நிறுவனங்களுடன் இணைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி உள்ளோம்.
மேலும் போதைக்கு அடிமை ஆனவர்களுக்கு அதிலிருந்து அவர்களை மீட்கும் வகையில் திருமலை மிஷன் அறக்கட்டளை மூலமாக இயங்கும் என்.ஆர்.ராமசாமி மறுவாழ்வு மையம் மூலமாக கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து போதை பழக்கதிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.
கருத்தரங்கை தொழில் சார்ந்த ஆரோக்கிய அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் டாக்டர் ஜெயராஜ் தொடங்கி வைத்து கார்ப்பரேட் நிறுவனங்களில் மனித வளத்தில் மாறிவரும் பொறுப்புகள் என்பது பற்றி பேசுகையில் :
தொழில் சார்ந்த ஆரோக்கிய சேவை என்பது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகிறது. ஆனால் அதை பற்றி அறியாத நிலை இருந்தது,1960ம் ஆண்டில் என் எல் சி நிறுவனத்தில் தொழில் சார்ந்த ஆரோக்கிய சேவைகள் தொடங்கப்பட்டது. தற்போது எல்லா நிறுவனங்களிலும் வந்துள்ளது. அங்கு என்ன என்ன மருத்துவ சாதனங்கள் இருக்க வேண்டும், தொழில் கூடங்களில் ஏற்படும் ஆபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகையான மருத்துவ சேவை என்பது பற்றிய விவரங்கள் இருக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு உருவாகி உள்ளது என்று கூறினார்.
கருத்தரங்கில் திருமலை மிஷன் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஹரிஹரசுதன் பங்கேற்று தொழில் சார்ந்த அவசர கால மருத்துவம் மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தும் நிலையை நிர்வகித்தல் என்பது பற்றி யும்,என்.ஆர்.ராமசாமி மறுவாழ்வு மைய ஆலோசகர் கவிதா பங்கேற்று போதை பழக்கத்திற்கான மருத்துவ சேவை கடைபிடிக்காமல் விலகி இருத்தல் என்பது பற்றி கருத்துரை வழங்கினார்கள்.
முன்னதாக கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை முதுநிலை மேலாளர் பிரசாந்த் குமார் பால் வரவேற்றார். முடிவில் மருத்துவமனை டயட்டிஷியன் ஸ்ரீமதி தர்ஷினி நன்றி கூறினார்