கற்பக விருட்சம் அறக்கட்டளை கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 28 தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு ₹14,000 மதிப்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. திரைப்பட இயக்குநர்கள் திரு.சத்தியசீலன், திரு.சுப்ரமணிய பாரதி மற்றும் உதவியாளர் தங்கம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து நிவாரணப் பொருட்களை வழங்கினர். திரு.மணிமாறன் இணைய தள பத்திரிக்கையாளர்களை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் அனைவரும் நேரடியாக பங்கேற்று சிறப்பித்தனர்.